Friday, December 21, 2012

காலக்கூறுகள் ... குறுக்கா? நெடுக்கா?

"காலம்" என்பது நம் வசதிப்படிப் பிரித்துக்கொள்ளும் ஏதோ ஓர் இயற்கைக் கூறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
  
தமிழ் இலக்கணத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று வகைப்படுத்துகிறார்கள். பிற மொழிகளில் past, perfect, imperfect, preterite, pluperfect, future ... என்று அப்பப்பா, தலை சுற்றும் அளவுக்குப் பெயர்கள். அதெல்லாம் கிடக்கட்டும். இந்தப் பதிவு இலக்கணம் பற்றியதில்லை, பயந்துவிடவேண்டாம்! ;-)  

காலத்தைக் குறுக்காகப் (horizontal) பார்க்காமல், நெட்டுக்கா/நெடியதாக (vertical) ...   மேலே, நடுவே, கீழே என்ற வகையில் நான் பார்த்த சில காட்சிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன், அவ்வளவே.


மேலே ... உயிர்களை வாழவைக்கும் ஒளிச்சுடர் ...  நிலைக்காலம்/நிலைத்த காலம்/நிரந்தர காலம்



நடுவே ... எங்கூர்ப் பசங்க ... நிகழ்காலம் 



கீழே ... என் வீட்டு வாசலில் ... இறந்த காலம்


எல்லாம் இயற்கையே! 

2 comments:

  1. காலம் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. எந்தக் காலத்தில் இருந்து படம் எடுத்தீர்கள் அம்மா ??

    விடை சொல்லுங்கள் ..மிக ஆவலாய்க் காத்திருக்கிறேன் ...

    ReplyDelete