கடல் என்றால் அதன் சிறப்பு பலருக்கும் தெரியாது. கடற்கரை என்றால் பலருக்கும் அது ஒரு பொழுதுபோக்கும் இடமாகப் பயன்படுகிறது.
அந்தக் கடல் வற்றினாலோ சீறினாலோ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் உண்டாகும் துன்பம் பல.
நிலவகையால் பிரிந்திருக்கும் இடங்களை இணைப்பது கடல்தானே!
கொஞ்ச நேரம் ஒரு கடற்கரையில் ஒரு தனித்த இடத்தில் உட்கார்ந்து அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் -- ஆன்மிகம் உங்கள் கையில் அடக்கம். வேறு வகைத் தியானம் தேவையில்லை. நம் உள்மனத்தை அப்படியே வெளிக்காட்டி உறவாடும் அந்தக் கடல்.
கடற்கரை மணலில் நடக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். இங்கே பக்கத்தில் மோன்டெரே (Monterey) கடற்கரையில் சில நாட்கள் செலவழிக்கும் பேறு கிட்டியது. அப்போது எடுத்த சில படங்கள் இங்கே.
1. இப்போதுதான் என் நாள் தொடங்குகிறது.
2. இரவில் போன மீனவரோ யாரோ வீடு திரும்புகிறார்கள்.
3. நடு மதியம். ஒரே குதூகலம்.
4. என்
பாதுகாப்பாளர்.
5. அலுவலகம் போய்த் திரும்பும் அலுப்புடன் ...
6. அது சரீ, அவன் எங்கெ போய்த் தொலைஞ்சான்? அப்பா, அம்மா, மனைவியின் காத்திருப்பு ...
7. அவ எங்கெ போனா?
8. எல்லாரும் ஒங்க ஒங்க ஊட்டுக்குப் போங்க.
9. நான் குளிச்சிட்டுத் தூங்கப்போறேன். நாளெக்கிப் பாப்பம்.