Thursday, January 24, 2013

கடலே, எம்மைக் காக்கும் துணையே ...

கடல் என்றால் அதன் சிறப்பு பலருக்கும் தெரியாது. கடற்கரை என்றால் பலருக்கும் அது ஒரு பொழுதுபோக்கும் இடமாகப் பயன்படுகிறது.  


அந்தக் கடல் வற்றினாலோ சீறினாலோ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் உண்டாகும் துன்பம் பல.


நிலவகையால் பிரிந்திருக்கும் இடங்களை இணைப்பது கடல்தானே!

கொஞ்ச நேரம் ஒரு கடற்கரையில் ஒரு தனித்த இடத்தில் உட்கார்ந்து அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் -- ஆன்மிகம் உங்கள் கையில் அடக்கம். வேறு வகைத் தியானம் தேவையில்லை. நம் உள்மனத்தை அப்படியே வெளிக்காட்டி உறவாடும் அந்தக் கடல்.

கடற்கரை மணலில் நடக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். இங்கே பக்கத்தில் மோன்டெரே (Monterey) கடற்கரையில் சில நாட்கள் செலவழிக்கும் பேறு கிட்டியது. அப்போது எடுத்த சில படங்கள் இங்கே.


1. இப்போதுதான் என் நாள் தொடங்குகிறது.  

 


2. இரவில் போன மீனவரோ யாரோ வீடு திரும்புகிறார்கள்.  




3. நடு மதியம். ஒரே குதூகலம்.


4. என் பாதுகாப்பாளர்.




5. அலுவலகம் போய்த் திரும்பும் அலுப்புடன் ...


6. அது சரீ, அவன் எங்கெ போய்த் தொலைஞ்சான்? அப்பா, அம்மா, மனைவியின் காத்திருப்பு ...

  

7. அவ எங்கெ போனா?

  

8. எல்லாரும் ஒங்க ஒங்க ஊட்டுக்குப் போங்க.
 


  
  
  

9. நான் குளிச்சிட்டுத் தூங்கப்போறேன். நாளெக்கிப் பாப்பம்.


6 comments:

  1. ஜனவரியில் ஹாஃப் பேண்டுடன் கடற்கரையில் நிற்கமுடிவது தான் கலியின் சிறப்பு. இங்கே பனிமழை விழுந்துகொன்டு உள்ளது:-)

    காப்பாளர் புகைப்படம் முதன்முறை கண்டதில் மகிழ்ச்சி. Very handsome boy.அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி, செல்வன்! இந்தப் படங்கள் கடந்த ஜூனில் எடுத்தவை. இப்பொ, ஜனவரியிலும் கலியில் சில நாட்களில் ஹாஃப் பேன்ட்ஸ் போட்டு நடக்கலாம். மோன்ட்டெரெ போக நல்ல நேரம் செப்டெம்பெரில். கோடைக்கால வெயிலை ஈர்த்த கடல் நீர் வெதுவெது என்று இருக்கும். மக்கள் கூட்டமும் குறைவு.

      Delete
  2. அக்கா! நானும் சுபாவும் தமிழ் இணைய மாநாட்டை மணிவண்ணனுடன் முடித்த கையோடு மாண்ட்ரே வளைகுடா போய் வந்தோம்! அங்குள்ள கடலிய உயிரினப்பூங்கா ஓர் அற்புதம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கண்ணன், அந்த அக்வேரியம் எனக்கும் பிடிக்கும். அங்கே ஒரு clam இருக்கு. அதைப் பார்த்த பிறகுதான் "Happy as a clam" என்ற சொல்வழக்கு எனக்குப் புரிந்தது.

      Delete
  3. அற்புத அம்மா
    ஆஹா..ஓஹோ ...அற்புதம் அம்மா

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததுக்கு ரொம்ப நன்றி எங்கள் துரைமகனாரே. ஆனா இது தூத்துக்குடி ஜோக் இல்லையே?!!! ஜோக்-னா ... அப்றம் வூட்லெ தலைமெக்கு நெறய ரெசிப்பி அனுப்பிடுவேனாக்கும்! ;-) ;-) ;-)

      Delete