Friday, April 29, 2011

மதுரை -- செட்டிநாடு போனபோது ...

மதுரையிலிருந்து செட்டிநாடு நோக்கிப் போன வழியில்...


1. யானைமலை



2. திருமோகூர்க் கோவில் ...


2. a: கொடிக் கம்பம் ...






2. b: மன்மதன், இரதி ... எதிரும் புதிருமாய் ...



இரதியின் கையை உடைக்க எவருக்குத்தான் கிறுக்குப் பிடித்ததோ?




2. c: ஆண்டாள் ... பரந்தாமனைத் தொட்டடுத்து; எங்கே அவன்?






... இதோ ... இங்கே ... அங்கே ...





3. மேலூர் சாலையில் ... வழு வழு கல்லாக மாறக் காத்திருக்கும் பாறைகள் ...


4. ஆத்தங்குடி, செட்டிநாடு. ஒரு வீட்டின் நுழைவாயில் ...
(தொடரும்)

4 comments:

  1. 1. இந்த யானை மலையெல்லாம் குணங்குடியார் சுற்றிய பிரதேசம். நமக்குள்ளே: இந்த மலையை பார்த்து, நான் பேசிக்கொண்ட தனிமொழிகள் நினைவுக்கு வருகின்றன.

    2. a,b,c,...திருமோஹூர் அழகிய கோயில். அநேகர் சக்ரத்தாழ்வார் சன்னதிக்கு வந்து போனாலும், பெருமாள் சன்னதியும் ரொம்ப பிரமாதம். வழித்துணையான காளமேகப்பெருமாள். ஆகுருதியான சிலாரூபம். இந்த ரதியும், மன்மதனுமாக என்னே சிற்பங்கள்!

    3. இயற்கையை சிதைப்பதில் முதலிடம், ஏன் ஒரே இடம், மனிதனுக்கே.

    4.கம்பீரமான அரண்மனை. புதுவயல் போக முடிந்ததோ? அழகிய வயல் அது, அந்தக்காலத்திலே. இப்போ தெரியாது.

    ReplyDelete
  2. கள்ளழகருக்கு ஒரு பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி இருப்பது போல் இவருக்கும் உண்டு. ஆனால் போக முடியாத படி சகதியாய் இருக்கும். சில வருடங்களுக்கு முன் போன போது இவற்றை சகித்துக்கொண்டு பார்த்துவிட்டு வந்தேன். சிறிய அந்தக்கால கோயிலுள் கருப்பண்ணசாமி வீற்றிருப்பார்.

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் மலையெல்லாம் கிரானைட் கற்களாக மாறிட்டு வருது. இப்படி மூன்று, நான்கு மலைகளே மதுரையில் இருந்து தேனீ செல்லும் சாலையில் காணாமல் போய்விட்டன.:(((((

    ReplyDelete
  4. அக்கா, திருமோகூர் படங்கள் அருமை.
    இரதியின் கை உடைக்கப்பட்டிருப்பது வருத்தமாகவே உள்ளது.

    திருமோகூர் கோயில் அருகில் ஒரு பொய்கை உள்ளதே, அதைப் பார்த்தீர்களா,

    அன்புடன்
    தம்பி
    காளை

    ReplyDelete