Saturday, April 30, 2011

மதுரை -- இன்று

மதுரையின் வடக்குப் புறத்திலிருந்து ஊருக்குள்ளே போய்த் திரும்பி வரும் வழிகளில் ...

1. மேல்பாலம் ...



2. மஞ்சனக்காரத் தெருப் பக்கம் ... சுங்கடிப் புடவைக் கடையைத் தேடிப் போனபோது ...




3. மேல மாசி வீதியில் ... இம்மையில் நன்மை தருவார் கோயில் ...



4. மேல மாசி வீதியில் ... பழைய "உடுப்பி" உணவகம் புதியவர் வருகையில் "போத்தீஸ்" ஆக மாறி ...



5. மேல மாசி வீதியில் (~ 1951 - 1962) நாங்கள் குடியிருந்த வீட்டின் முகப்பு.  இன்று நிறைய மாற்றம். நல்ல அகலமாக இருந்த முன்பக்கத்தைப் பிரித்திருக்கிறார்கள். நல்ல வேளை, தொட்டடுத்த சந்து இடிபடாமல் இருக்கிறது.



6. மேலமாசி வீதியும் (பழைய நாள்) சின்னக்கடைத் தெருவும் (அதாவது இன்றைய நேதாஜி ரோடும்) கூடும் இடத்தில் ... மீனாட்சி + சொக்கருக்குப் "பூமாலை போட்டு, பூக்கொட்டும்" பந்தல் -- சித்திரைத் திருவிழாவிற்காக அமைத்தது. பந்தலின் மேற்புறத்துக் கோடியில் இடது, வலது பக்கங்களில் தொங்கும் பொம்மைகள் காலை வேளையில் "கூண்டு"க்குள் அடைபட்டுக் கிடக்கின்றன; மாலையில் மீனாட்சியும் சொக்கரும் வீதி வலம்போது கூண்டிலிருந்து வெளியேறிவிடும் -- மாலை போட்டு, பூக்கொட்ட!



7. அந்தக் காலத்தில் ... சின்னக் கடைத் தெரு என்றும் பூக்கடைத் தெரு என்றும் சொல்லப்பட்ட தெரு. இப்போது ஒரு பூவையும் காணோம். இந்தத் தெரு வழியாகத்தான் அப்பா என் கையைப் பிடித்துக்கொண்டு என்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிப் போவார். தெருவின் முடிவில், படத்தில் நேர் எதிரே தெரிவது முன் ஒரு காலத்தில் "பழைய ஆஸ்பத்திரி" இருந்த இடம். அந்த வளாகத்தில்தான் நான் படித்த "அரசினர் மகளிர் பள்ளி" இருந்தது.  "பழைய ஆஸ்பத்திரி"ப் பள்ளிக்கூடம் என்று சொன்னாலே புரியும்!



8. வடக்கு வெளிவீதியில் ... சேதுபதி உயர்நிலைப் பள்ளி ... . கூர்ந்து பார்த்தால் பாரதி சிலை தெரியும். நேரே நுழைந்து இடது பக்கமாகப் பின்புறம் போனால் இருக்கும் (?) இருந்த (?) திறந்த வெளியில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நாடகம் போடுவார்கள். உள்ளே ராமண்ணா ஹால் -- இசைக் கச்சேரிகள் நடந்த (நடக்கும்?) இடம்!




9. "தமிழ்ச்சங்க(ம்) ரோடு"! செந்தமிழ்க் கல்லூரி ...



10. சிம்மக்கல். இந்தப் பிள்ளையார் புதுசு போல! முன்னே பார்த்த நினைவில்லை. பிள்ளையார் சிலைக்குக் கீழே இருக்கிறது இந்த இடத்துக்குப் பெயர் தந்த "சிம்மம்."



11. சிம்மக்கல்லில் ... பழைய சொக்கநாதர் கோயில் -- தெரு மூலையில் தெரிவது.



12. விளக்குத்தூண் ("சந்திப்பு" என்று சொல்லலாமா?)



13. யானைக்கல்.



14. மைய மண்டபம் (வைகை ஆற்றில்) . அழகர் இறங்கக் காத்திருக்கும் நிலையில்.



15. இளங்கோ பாடிய "வையை என்ற பொய்யாக் குலக்கொடி"? எதற்கும் இடம் தரும் மகராசி?








16. கோரிப்பாளையம். காலால், வண்டியில் ... என்று எப்படியும் அங்கே இங்கே போய்வருவோம்!



17. கோரிப்பாளையம் ... நவநீத கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார் கோவில்


6 comments:

  1. 6. சந்தை விட்டது தற்செயல்; முகப்பை பொந்தாக்கியது மனிதச்செயல்;
    7.சின்னச்சந்தோ விசாலம்; நேதாஜியை குறுக்கிவிட்டார்கள்.
    8.பாரதியை பார்த்தேன். கேட்டில் உள்ள சித்திரப்பாவையும் பார்த்தேன். மடக்கு நாற்காலி மனுஷன் ஆரோ?
    9. கல்லூரி தகுந்த இடத்தில்;
    10.அவர் பெயர் சாங்கோபாங்கப் பிள்ளையாரா? சிம்மவாஹனம் வேறே!
    15. இடம் தரும் மகராசி தான். அதான் ஏறி மிதிக்கறாஹ.

    ReplyDelete
  2. பொய்யாக்குலக்கொடி கண்ணில்நீரை வரவழைத்துவிட்டாளே.

    சின்னக்கடையில் எந்தக் கடையும் இப்போ இல்லை. அங்கே ஒரு மூலையில் இருக்கும் கீரைக்காரியிடம் கீரை வாங்கி வருவோம். காய்கறிகளும் கூடக் கிடைக்கும். இப்போ??

    சேதுபதி பள்ளி அப்படியே இருக்கு போல. ம்ம்ம்ம்ம் அப்பா அங்கே தான் வேலை செய்தார்.

    தமிழ்ச்சங்கமும் மாறினதாத் தெரியலை.

    ReplyDelete
  3. நம்ம ஆளு, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பிலே இருக்காரே வருஷக் கணக்கா அவரை விட்டுட்டீங்களே, உதயன் அந்த இடத்தின் அவுட்லைன் மட்டும் கொடுத்தார். :(

    ReplyDelete
  4. Pl. watch Madurai town in 1945!
    http://www.youtube.com/watch?v=TV21eP0uu_0

    -Harimanikandan

    ReplyDelete
  5. thirupparankundram, Alagarkoil Maduraikkul thaan irukku :( Illa Main madurai padangal mattum dhaana?

    ReplyDelete
  6. 4. .. புதியவர் வருகையில் "போத்தீஸ்" ஆக மாறி ...
    எனக்குத் தெரிந்தவரை, "போத்தீஸ்" என்பது 'போத்திராசா' என்னும் குடும்பப்பெயரின் சுருக்கப் பன்மை. திருவில்லிப்பத்தூரில் தொடங்கிய குடும்ப வியாபாரம்.

    நல்ல படங்கள். ஞாபகங்களைத் தூண்டி விட்டிருக்கின்றன. நன்றி.

    ReplyDelete