Tuesday, May 10, 2011

செட்டிநாடு -- அமராவதிபுதூர்

அமராவதிபுதூரில் ஓர் அமைதியான ஆசிரமம் ... .

1. ஆசிரமத்தைத் தொடக்க நாள் முதல் பேணிவரும் பெருந்தகை திரு. பழனியப்பன்.




2. இவர் வீட்டிற்குப் பக்கத்தில் நிற்கும் மிகப் பெரிய இரண்டு நாகலிங்க மரங்களில் குலுங்கும் மொட்டுகளும் பூக்களும் ...









3. நாகலிங்க மரத்தில் காய்? பழம்? உள்ளே விதைகள் இருக்குமா?



4. நாகலிங்க மரத்தில் அண்மையில் பிறந்து வாழும் குட்டி ...



5. " நீங்கள் இன்று வந்து இன்றே போகும் விருந்தினர். நாங்கள் இந்த இடத்தில் நிலைத்த உரிமையாளர்" என்று உறுதியாகச் சொல்லும் கூட்டம் ...




6. ஐயோ, இந்த மகாராணியின் குரலுக்கு எதிர்க் குரல் கொடுக்க முடியவே இல்லை! இவளிடம் கொத்துப் படாமல் தப்பித்தது பெரும்பாடு!!




7. இந்த இடம் எங்களுக்கும்தான் என்று உரிமை கொண்டாடுபவர்களுக்குக் குறைவில்லை!



8. கண்ணுக்கு விருந்தோடு வயிற்றுக்கும் ... . அப்பளம், வத்தல், உருளைக் கிழங்குப் பொரியல், வெண்டைக்காய் மண்டி, சாம்பாருடன் ...



9. கமலி, அன்புமீனா, மீனாவின் தந்தையைப் பார்த்துக்கொள்ளும் பெண்மணி ...



10. பொறுமையாக எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுத்த வண்டியோட்டி ...


மனதுக்கு நிறைவும் அமைதியும் தரும் ஆசிரமம் கண்டு சுவைக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

2 comments:

  1. நாலாவது படம்: அடி சமத்தே! எங்காத்து 'சீனாச்சிருக்கத்தி' Poppy மாதிரி இருக்கேயே.

    ஏழாவது படம்: பால்ய நினைவலைகள்! காரைக்குடி தாத்தா ஒத்துப்பார்!

    அரியக்குடிக்குக் காத்திருக்கிறேன். பெருமாள் கோயி குளத்தாண்ட போய், 'ராஜூ' என்று கூப்பிட்டால், நீர் அலை பாயும்; பெருமாள் எட்டிப்பார்ப்பார். கோயிலுக்கு வலது சாரியில், தாத்தா பேர் சொன்னால், இலையில் பஞ்சபக்ஷபரமான்னம் வந்து விழும்.

    ReplyDelete
  2. அரியக்குடிப் படங்கள் போட்டிருக்கேன், 'இ' சார். முடிந்தால் பாருங்கள். குளத்துக்குப் போகமுடியலெ, ரொம்பத் தவிச்சேன். கோவில் சார்ந்த குளங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete