ஈஸ்டருக்கு முந்தி ...
1. திருநள்ளாறு ... தர்ப்பாரண்யேசுவரர் கோவில்
2. வேளாங்கண்ணி மாதா கோயில் ...
3. தில்லைத் திருக்கூத்தன் கோவில் ...
எல்லாம் இயன்றது ... அன்பு நண்பர் மணிவண்ணன் + அவர் இனிய மனைவி ஆஷா + அவர்களின் வண்டியோட்டி கஜ ... இவர்களால்தான்! எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி; குறிப்பாக ... வேளாங்கண்ணிக்குப் போக நான் இழுத்தபடி வந்ததுக்கு! :-)
சனீசுரன் என்னை விட்டு விலகுவானோ, பிடிச்ச பிடியாய் இருந்து என்னை ஆட்டிவைப்பானோ தெரியலெ ... ஆனால் வேளாங்கண்ணி மாதாவிடம் எனக்கு ஒரு வேண்டுதல் உண்டு (எனக்காக இல்லை). அதை அந்த மாதா நிறைவேற்றிவைக்கவேண்டும்!
அம்மா, தங்கள் மன உறுதியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒரே நாளில் மூன்று கோவில்களும் பார்த்து விட்டீர்கள். வேளாங்கண்ணி மாதாவிடம் வேண்டினால் கட்டாயம் நடக்கும் அம்மா......எனக்கும் பள்ளிக்காலங்களிலிருந்தே நம்பிக்கை உண்டு.
ReplyDeleteஆமாம், பவளஸ்ரீ. என் வேண்டுதலை வெளியே சொல்லக்கூடாது. அது என் குடும்பத்துக்காக இல்லை என்பதை மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவேளாங்கண்ணி மாதாவிடம் நீங்கள் வேண்டிக்கொண்டது, இரு விஷயங்களை நினைவுறுத்துகிறது.
ReplyDelete1. பல வருடங்களுக்கு முன் ஆரோக்கிய மாதாவின் திருவுருவம் சென்னையில் உலா கொண்டு வந்த போது, அந்த விழாவில் கலந்து கொண்டது.
2. ஸான் ஃபிரான்ஸிஸ்கோ கத்தோலிக்கக் கதீட்ரலில், நானும், வஸந்தாவும், மனம் விட்டு பிரார்த்தித்தது.