ஆமாம், பல வகைச் சோளம் இங்கே கிடைக்கும். பல இடங்களில் அவை காய்த்து முதிர்ந்த நிலையிலேயே கிடைக்கும்.
இந்த முறை செஞ்சோள வகை ஒன்று ... காயாமல் பச்சையாகக் கிடைத்தது ... உழவர் சந்தையில் இல்லை, ஆனால் ஒரு நல்ல கடையில் ...
பிரித்துப் பார்த்தேன் ...
உரித்துப் பார்த்தேன் ....
செம்முத்து எடுத்துச் சேர்த்தேன் பிற காய்க் கலவையில் ...
கண்ணுக்கும் கருத்துக்கும் சுவைக்கும் உடல் நலத்துக்கும் இனியது! இயற்கை அழகுக்கும் சுவைக்கும் நலத்துக்கும் நன்றி!
உசிலம்பட்டி வயக்காடுகளில் காக்காச்சோளம் (சின்னச்செடி) மக்காச்சோளம் (வளர்ந்த கதிர்) கிடைக்கும். இரண்டுமே பச்சையாக சாப்பிட்டால் ருசி. அது நினைவில் வந்தது.
ReplyDeleteசெஞ்சோளம், பச்சைச் சோளம்!! இவையெல்லாம் எனக்குப் புதிது. ஜப்பானிய மொழியில் சமைத்தல் என்ற சொல் இல்லை. அவர்கள் பயன்படுத்தும் சொல், ‘ரியோரி’ அதன் பொருள், “the material" என்பது. எனவேதான் உணவுப்பொருட்களை அழகுற அலங்கரித்து வழங்குவதை ஒரு கலையாகக் கண்டனர். உங்கள் சோளத்தட்டில் அக்கலை நயம் மிளிர்கிறது!
ReplyDeleteஎண்ணங்களுக்கு வண்ணம் உண்டல்லவா , உங்களின் வண்ண சேர்க்கை வன்மையான மென்மையை உணர்த்துகிறது .......இது கண்ணுக்கும் கருத்துக்கும் என்பதிலிருந்து தொடங்குவதாக அமைகிறது..
ReplyDeleteசோளம் வேகவைத்துச் சுண்டல் போலும் செய்வேன். உப்புக்கூட இல்லாமல் உதிர்த்தும் உண்ணலாம். செஞ்சோளம் பார்த்ததில்லை. நன்றி அம்மா.
ReplyDelete