Wednesday, December 14, 2011

வான் வழிச் செலவில் உணவு ...

1. உணவு வந்தது ... . மேலே இருந்தவை "பரோட்டா"த் துண்டுகள்.




2. பிரி பிரி என்று அந்த அலுமினியத் தாளைப் பிரித்துப் பார்த்தேன். காராமணிப்பயறுபோல ஒன்று, பருப்புசாதம்போல ஒன்று, சுவை குலைக்கப்பட்ட பழுப்புக்கீரை, அதோடு உருளைக்கிழங்கோ எதோ ஒன்று.



3. ஏதோ ஒரு ஊறுகாயும் கிடைத்தது! உப்பு வேண்டாம் என்றால் இதைத் தொடக்கூடாது!



4. நல்ல சத்துள்ள உணவு ஒன்றும் கிடைத்தது.



5. பழம்/பாலடைக்கட்டி (cheese) வேண்டுமா? அதுவும் வந்தது.



6. தாதியரின் புன்சிரிப்பும் கிடைத்தது!



7. மொத்தத்தில் ... அருமையான ... செலவு அதிகமான ... பயணம்! இனிது, இனிது வாழ்க்கை தரும் வாய்ப்பு இனிது!

1 comment:

  1. நீங்கள் சொல்லும் நயம் இவை அனைத்திலும்
    இனிது.

    நயம்பட உரைக்கும் கலையைக் கற்றுக்கொள்ள
    வேண்டும்


    தேவ்

    ReplyDelete