Friday, September 23, 2011

காலம் மாறுது ...

இங்கே "இலை உதிர் காலம்" தொடங்குகிறது. மனிதர் வகுத்த கால அட்டவணைக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட நாளில் இயற்கை தன் வடிவை மாற்றிக்கொள்ளத் தொடங்காது. இயற்கையின் மாற்றம் தொடர்ச்சியைக் காட்டும்.

1. என் வீட்டு முன் இருக்கும் மரம் காட்டும் இலை அழகு ... கால மாற்றத்தின் அறிகுறி ...

 

சில நாட்களில் இன்னும் சில மாற்றம் ...




2. எதிரே இருக்கும் மெக்னோலியா (magnolia) மரத்தில் ... எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பூ ...




3. வீட்டில் பிழைத்துத் தழைத்துவரும் சிறு மஞ்சள் (?) / மாங்காய் இஞ்சி (?) ...





4. கருவெப்பிள்ளெ (!) / கறிவேப்பிலை ... . எத்தனைச் செடிகள் இருந்தாலும் போதாது ... . தழை தழை என ஒன்றே வேண்டுவது!





5. இவர்கள் யார் என்று தெரியவில்லை ... கம்பு, தினைகளைத் தூவியதின் விளைவு!






6. இவள் யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. பெரும்பாலும் கேன்டலோப் (cantaloupe) ஆக இருக்கலாம். இவள் தளிர் விட்டிருக்கிறாள் என்று இவளுக்கு நான் சொல்லணுமா? இல்லை, "நான் தளிர்த்திருக்கிறேன், கொம்பு தா" என்று இவள் எனக்குச் சொல்லுகிறாளா? என்ன செய்வேன் இந்தக் குப்பைக் கொழுந்தை?



கால மாற்றமும் நல்லதுதானே!


3 comments:

  1. 1.அரவம் தோலை உருவி கழட்டுவத்உ போல, இங்கும் இலைகள் உதிர, கையில் தோட்டி!

    2. ஐந்து + ஆறு: ஒரு பாமர கீர்த்தி பாடவேணுமே!

    ReplyDelete
  2. கடைசிப் படம் பீர்க்கையோ, புடலையோ தெரியலை. இலையைப்பார்த்தால் புடலை போல் தான் தெரிகிறது. வாசனையை வைத்துக் கண்டு பிடிக்கலாம். ஆனால் பீர்க்கை கிடுகிடுனு வளருமே! அதை வைச்சுச் சொல்லமுடியும், அதனால் பீர்க்கை இல்லை.

    ReplyDelete