Sunday, September 26, 2010

First effort to describe "Tamil"

(also known as "malabar"or "malauar" in those days) to non-Indians by the Portuguese missionary Fr. Henrique Henriques.

The effort of describing Tamil by Fr. Henriques to other missionaries started *before 1549 A.D*, and his grammar of Tamil in Portuguese (that is, describing Tamil in Portuguese) surfaced in 1549 A.D.

This particular hand-written manuscript was obtained (way back in the sixties) for our research from Lisbon, Portugal.

The following page is the first folio entitled "Arte Da Lingua Malabar":


The following page introduces the Tamil alphabet (as the missionary perceived it in the 16th century) in its own orthography:



Notice the segment on the first line "... ba be bi bo bu... " in the following document. Many of us from an older generation can recall our recitation of the English vowels: "a ஏ, e ஈ, i ஐ, o ஓ, u யூ," right? :) The Portuguese seem to have had their own recitation method ("ba, be, bi, bo, bu"). There's much more to know from this manuscript!

Saturday, September 25, 2010

என் அன்பு நவமும் தூய திரு சகோதரி யுவான் மேரியும்...

இறந்துவிட்டார்கள். கடந்த 15 நாட்களில் இரண்டு அழுத்தமான துயரச் செய்திகள் மதுரையிலிருந்து.

நவம் ("நவனீதம்") என் நெருங்கிய தோழி; இறந்தது Sept. 10, 2010-இல் மதுரையில்.

தூய திரு சகோதரி யுவான் மேரி (Rev. Sr. Yuvonne Mary) மதுரையில் பாத்திமாக் கல்லூரியில் அந்த நாட்களில் ஆசிரியை; இறந்தது Sept. 24, 2010-இல் Waterville, Maine, U.S.A.-இல். அண்மையில் அவரது உடல் நலக்குறைவு பற்றிக் கேள்விப்பட்டு, Maine-இல் பல இடங்களுக்கும் தொடர்பு கொண்டேன்; சரியான தகவல் கிடைக்கவேயில்லை.

இருவருக்கும் பல ஒற்றுமைகள், என்போன்றோரைத் துயரத்தில் ஆழ்த்தியது தவிர. இருவரும் கன்னியர். முன்னவர் வீட்டோடு உறவினரோடு இருந்து உறவினர் நண்பர்கள் ஏழை பாழைகள் என்று எல்லார்க்கும் உதவினார். பின்னவர் கன்னிமாடத்தில் இணைந்து அனைவர்க்கும் உதவினார்.

என் மனம் அலைபாய்வதைத் தவிர்த்து ஒருமைப்படும்போது பிற செய்திகளையும் பகிர்ந்துகொள்ள முயல்வேன். இப்போது என்னால் இயன்றது கசிந்த கண்களோடு அந்த இரு அன்பான உள்ளங்களுக்கும் என் அஞ்சலி செலுத்துவது மட்டுமே.

"பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே
பார்க்கின்ற மலரூடே நீயே இருத்தி அப் பனிமலர் எடுக்க
ஒண்ணேன்..." (தாயுமானவர்)

இந்தப் பாடலைத் திரு அவ்வை துரைசாமிப் பிள்ளை வகுப்பில் நானும் நவமும் ஒன்றாகக் கேட்டோம்; மனமுருகினோம். 





அன்புடன்,
ராஜம்