Monday, October 24, 2011

தேன்குழல் ...

செய்தேனே ... !!

1. முதலில் ... பிள்ளையாருக்கு ... பிள்ளையார் மாவு ...



2. அச்சு வழியே பிழிபட்டு ... எண்ணெயில் மிதக்கும் குழல் ...



3. கர கர ... குழல்கள் ...




இங்கே முன்புறம் வெள்ளை வெளேர் என இருப்பதுதான் "அரை வேக்காட்டு"க் குழல்; மெது மெது என்று ... ஒரு "கிழவி"போல் தளர்ந்துபோய் ... மென்மையாக .... ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்!



வேறு வழியில்லாமல் ... சும்மா ... அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து செய்தேன்! நல்லாவே வந்தது! வல்லவ[னு/ளு]க்குப் புல்லும் ஆயுதம்???

ஒரு பெரீஇஇய இது .. என்ன-னா ... இதிலெ வெண்ணெய் கலக்கவே இல்லே. வீகன் (vegan) முறை!


Saturday, October 22, 2011

இது ஒரு வகைப் பறங்கி ...

இதன் பெயர் butternut squash. தமிழில் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்! :-)

இது இப்படி இருக்கும் -- சுரைக்காய் வடிவம், ஆனால் தடித்த தோலும் பறங்கிக்காய் போல மஞ்சள் நிறமான உட்புறமும் கொண்டது.



இதை இரண்டு பகுதியாக வெட்டி, "அவனுக்குள்" (oven) வைத்து, 350 degree சூட்டில் ஒரு மணி நேரத்திற்கும் சிறிது மேலாகச் சுட்டேன்.





பிறகு, ஒரு காகிதப் பையில் போட்டு ஆறவைத்தேன்.



வெளியே எடுத்து, தோலை உரித்து, உட்புறச் சத்தை எடுத்தேன்.



சுவை அருமை! இதை அப்படியே விழுங்கலாம்! அல்லது மற்ற வகைகளிலும் பயன்படுத்தலாம்!  
பிற பின்னர்! :-) :-) :-)

செஞ்சோளம்!

ஆமாம், பல வகைச் சோளம் இங்கே கிடைக்கும். பல இடங்களில் அவை காய்த்து முதிர்ந்த நிலையிலேயே கிடைக்கும்.  

இந்த முறை செஞ்சோள வகை ஒன்று ... காயாமல் பச்சையாகக் கிடைத்தது ... உழவர் சந்தையில் இல்லை, ஆனால் ஒரு நல்ல கடையில் ...


பிரித்துப் பார்த்தேன் ...

உரித்துப் பார்த்தேன் ....

செம்முத்து எடுத்துச் சேர்த்தேன் பிற காய்க் கலவையில்  ...
கண்ணுக்கும் கருத்துக்கும் சுவைக்கும் உடல் நலத்துக்கும் இனியது! இயற்கை அழகுக்கும் சுவைக்கும் நலத்துக்கும் நன்றி!

Thursday, October 6, 2011

அது அந்தக் காலம் - 3

பாத்திமாக் கல்லூரி, விளாங்குடி வளாகத்தில் கல்லூரி முதல் ஆண்டுவிழா (1958-1959). சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு ஏ. இலட்சுமணசாமி முதலியார் விளக்கேற்றிவைத்துத் தொடங்கினார்.