Saturday, October 30, 2010

சாமை, தேங்காய்க் கலவையில்...

சாமை என்பது millet என்று அறியப்படுவது. இது மிகவும் சத்துள்ள தானியம். வேகவைக்கும்போதே இதன் சுண்ணாம்புச்சத்தின் நறுமணம் பரவும்.

இங்கே சாமையை எளிதில் பயன்படுத்திச் சுவைக்கும் முறை. பலருக்கும் அறிமுகமான, அரிசியைப் பயன்படுத்திச் செய்யும் "தேங்காய்ச் சாதம்" போல.

1. ஒரு சிறு கோப்பை அளவு சாமை எடுத்துக் கழுவி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.




2. சாமையை ஒரு நல்ல பாத்திரத்தில் ஒன்றுக்கு 2 மடங்கு தண்ணீரில் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.



3. சாமை மலர்ந்தாற்போல் வெந்தவுடன் பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே எடுத்துவைக்கவும்.

4. மலர்ந்து வெந்திருக்கும் சாமையைத் தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.



5. நல்ல வாணலியில் துருவிய தேங்காய் (ஒரு பங்கு வெந்த சாமைக்கு 1/8~1/4 பங்காக) போட்டு, பொன் நிறமாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

6. அதே வாணலியில் எண்ணைய் இல்லாமலே கடுகும் உளுத்தம் பருப்பும் தாளித்து எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு மிளகாய் வத்தலும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.



5. பச்சைக் கறிவேப்பிலைத் தழை, சிறிதளவு பெருங்காயம் கலக்கவும்.

6. மேற்கண்ட பொருட்களை ஏற்கனவே வெந்து வைத்திருக்கிற சாமையில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.


7. தேவையானால் வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.

தலைமுறைச் சுழற்சி...

1.  தாத்தாவும் பேத்தியும்...



2. ரோஸாவும் ரோஜாவும்...




3. எண்ணிலடங்காச் சுழற்சி: ... விதை, தண்டு, இலை, பூ, காய், கனி, விதை ...





Friday, October 29, 2010

இஞ்சிச் சாறு...

1. நல்ல இஞ்சித் துண்டுகள். சிறு உரலில் போட்டு நைத்து எடுத்துக் கொள்ளவும்.



2. ஒரு நல்ல பாத்திரத்தில் நசித்த இஞ்சித் துண்டுகள், சிறிதளவு கரு மிளகு சேர்த்து, வேண்டுமளவு (ஒன்றுக்கு நாலு பங்கு) தண்ணீர் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.



3. நல்ல சர்க்கரை எடுத்துக்கொள்ளவும். அளவு 1~3 பெரிய தேக்கரண்டி. அவரவர் காரத்தைத் தாங்கும் சுவைக்கு ஏற்றபடி.


4. சர்க்கரையைக் கொதிவந்த இஞ்சிக் கலவையில் சேர்த்து, சர்க்கரை கரைந்து பச்சை வாசனை போகும் வரை (5~10 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

5. கொதிவந்த கலவையை அடுப்பிலிருந்து எடுத்து ஆறவைக்கவும்.

6. சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

6. ஆறியபின் அவரவர்க்கு விருப்பமான கோப்பையில் *சிறிய அளவில்* பரிமாறவும். ஒரே நேரத்தில் நிறையச் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். கவனம்!



7. சோயாப் பால் கலந்தால் "சுக்குக் காப்பி" போல இருக்கும்!

வண்ண உணவு...

1. நீல உருளைக்கிழங்கு...




2. பச்சைப் பாகற்காய்...



3. இலை, காய், கனிக் கலவை...
(கொல்லைப்புற இலை dandelion, காரட் துருவல், அன்னாசி, ...)

Thursday, October 28, 2010

ஆலி ஆடல்...

என் வீட்டுக் கொல்லையில் ஆலி ஆடலா? ஆமாம்!

1. பூப் பெண்களின் வரவேற்பு:




2. இவனும் இவளும்:


3. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே! என்ன ஆட்டம்!




Tuesday, October 26, 2010

புகையுண்ட கத்திரி மசியல்...

1. தேவையான பாத்திரம்




2. ஒரு சிறு கம்பி வட்டில்...




3. மரத்துண்டுகள் ...





5. சிறிதளவு நல்ல தண்ணீரில் 10~15 மணித்துளிகள் மரத்துண்டுகளை ஊறவிடவும்.

4. கத்திரிக்காய் ...






5. புகைக்க ஏற்பாடு... . ஊறிய மரத்துண்டுகளை எடுத்துப் பாத்திரத்தில் போட்டு, கம்பி வட்டிலை மேலே வைக்கவும். பாத்திரத்தின் அடிப்பகுதி கனமாக இருந்தால் தண்ணீர் ஊற்றவேண்டாம். ஊறிய மரத்துண்டுகளின் ஈரமே போதும்.




6. கத்திரி வில்லைகளைப் பரப்பவும்.


7. பாத்திரத்தை மூடி, மிதமான சூட்டில் காயைப் புகைய விடவும்.


8. நன்கு புகையுண்டபின்...




9. தோல் நீக்கி ...



10. மசாலா: தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயக் கலவை... (இடது); பொடித்த வெள்ளை எள் (வலது)




11. மசியல்: கத்திரி + தக்காளிக் கலவை + தமிழ்க்கொத்துமல்லித்தழை + சிறிது எலுமிச்சைச்சாறு




12. மசியல்: கத்திரி + பொடித்த எள் + இத்தாலியக் கொத்துமல்லி (பார்செல்லி)



13. சாப்பிடும்போது சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளலாம்.

Monday, October 25, 2010

Roots and stems ...

An experiment... in visual representation of the roots and stems of Old Tamil words.

The example root here is the reconstructed *அம் (*am):






I did the following for a colleague who taught Hindi:

இட்லி, சட்னி, பொடி...

பூட்டான் (bhutan) சிவப்பரிசியில் செய்த இட்டிலி...




வீட்டுக்கொல்லையில் விளைந்த மிளகாயில் சட்டினி...



புதுவகையான கீனுவா (quinoa) பொடி...



கீனுவாப் பொடியைத் தந்த உட்பொருள்கள்:

Taro root curry

காரமும் சுவையும் முறுவலும்... நிறைந்த... சேப்பங்கிழங்குக் கறி:




Sunday, October 24, 2010

குண்டுப்பாப்பா...

கமீலியாவின் (camelia) கவலை

குண்டாக இருக்கிறேன் என்று எல்லாரும் கேலி செய்கிறார்கள்...


வெட்கமாக இருக்கிறது...

கவலைப்படாதே! நிமிர்ந்து நில்! உன் செழுமை அவர்களுக்கு இல்லை!