Wednesday, August 31, 2011

பிள்ளையார் சதுர்த்தி -- 2

1. வேம்படி விநாயகர் ...
2. விநாயகருக்குப் படையல் ... . கொஞ்சம் களிமண், கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் தண்ணி எல்லாம் கலந்து செய்யறோம் ...
அன்புக்கு வரையறை ஏது? அதை எப்படி விளக்கினால் என்ன -- அன்பு, பக்தி, ஈடுபாடு, ஞானம், ஆன்மிகம் ... -- எல்லாம் ஒண்ணுதான், என்னைப் பொருத்தமட்டில். எல்லாத்துக்கும் வலிமை உண்டு!


பிள்ளையார் சதுர்த்தி -- 1

பிள்ளையாரே,

1. நீ உமையின் / பார்வதியின் உடம்பிலிருந்து வழித்து எடுத்த அழுக்குருண்டை என்று சொல்கிறார்களே.... அதுனாலெ ஒனக்கு ஒண்ணில்லெ ரெண்டு வெச்சுக்கோ ... ரெண்டு கருப்புப் பழம் என் படையல் ...


2. ஒன்னோடெ அம்மா பச்செ, அப்பா செவப்பு-ங்கறாங்களே ... அதுனாலெ ஒனக்கு ரெண்டு நெறத்துலெயும் படையல் ...3. நீ இப்படிப் பிறந்திருப்பாயோ .. ரெண்டுங்கெட்டானாய் ... ? எதுன்னாலும் சரி, நான் கொடுப்பதை எடுத்துக்கோ!


4. அது சரி ... நீ எதோ மகாபாரதம் அப்டி-னு ஒண்ணு எழுத ஒன்னோடெ கொம்பெ ஒடெச்சுக்கிட்டயாமே? அந்தக் கொம்பெல்லாம் இப்படித்தான் என் நினைவுக்கு வந்துச்சுப்பா!   


சரி. முடிஞ்சப்போ ... உன் பேர் சொல்லி, உன் கண்ணுலெ காட்டி, நாங்க திங்க்றதுக்கு எதாவது பண்ணிப் படெக்கப் பாக்றேன். அது வரை சுத்தி அலையாம அந்த அரச மரத்து அடியிலேயே இரு, என்ன?

இல்லெ, இல்லெ, வேப்ப மரத்தடியிலும் ஒனக்கு இடமிருக்கு. அந்தப் படம் அப்றம் போடறேன்.திருப்பூவணம் -- 4 -- பிறரும் நாயன்மாரும் ...

"திருப்பூவணம் -- 3 -- கடவுளரும் பிறரும்" ... என்ற பதிவில் ... "எடுத்த எல்லாப் படங்களையும் இணையத்துக்கு ஏற்றபடித் தயார்செய்ய முடியவில்லை. அதனால் இதுவே திருப்பூவணம் பற்றிய கடைசிப் பதிவு." என்று முடிவு எடுத்திருந்தேன்.  

ஆனால் ... முனைவர் காளைராசனின் திருப்பூவணப் படங்கள் என் ஆசையைத் தூண்டிவிட்டன!  அதனால் என் முயற்சி தொடர்ந்தது! என் படங்களின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்காது -- சின்னஞ்சிறிய கருவியினால் எடுத்தவை, இருட்டாக இருந்த இடங்களில்; அதோடு ... கொஞ்ச நேரம்கூட ... சரியாக நிற்கக்கூட முடியாத நிலையில்.


1. இறைவன் திருமுன் காப்பாளர் இருவர் ("துவார பாலகர்")2. முருகன்
3. பிள்ளையார். இவர் "அனுக்ஞை விநாயகர்" என்று கோவில் சொல்கிறது. யாருக்கு என்ன கொடுப்பார் என்று தெரியவில்லை.4. தென்பக்கம் நோக்கிய கடவுள் வடிவம் ("தட்சிணாமூர்த்தி")5. காய்ச்சல் கடவுள் ("ஜொர தேவர்"). இவருக்கு 4 முகங்கள். இவரை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை (என் அறியாமை?).


6. கார்த்திகேயன்7. கலைக் கடவுள் ("சரஸ்வதி")8. வித்தைக்கடவுளர் இருபக்கம் இருக்க ... பெண் கடவுளர் வரிசை ...
9. நாயன்மாரும் பிறரும் ... ஒழுங்கு வரிசை ... தொடக்கமும் தொடர்ச்சியும் ...

 10. நாயன்மாரும் பிறரும் ... ஒழுங்கு வரிசை ... நிறைவுப் பகுதிஇங்கே என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது மிகவும் சிறிய அளவு.

மின்னாளின் சந்நிதியில் நிறுத்தப்பட்டிருந்த உற்சவ வாகனங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. அவற்றைப் படம் எடுக்க இயலவில்லை (உடல் நலக்குறைவும் நேரம் போதாமையும்).


இயன்றால் எல்லாரும் நேரில் கண்டு பாராட்டிப் போற்றிக் காக்க வேண்டும்; அவ்வளவு அழகிய கலை நுணுக்கம் மிளிரும் ஆடம்பரமில்லாத அமைதியான துப்புரவான கோயில், வையை ஓடும் அருகில்!


Monday, August 29, 2011

எங்கு சென்றாயோ? ...
 
இங்கு ... எம்மை மறந்தாயோ? ...

1. இதழே கண்ணீராக ...
2. பூச்சிக்கடி பட்டு ...

3. காலடி ஓசைக்கு ஏங்கி ... தரையில் விழுந்து ...4. கிளைக்க வழியில்லாமல் ...
5. பிஞ்சிலே பழுத்து ...
6. வெம்பி ... கீழே விழுந்து ...
7. நீ வந்து பணம் கட்டக் காத்திருக்கோம் ...

 


என் வரவு நல்வரவே! :-)