Wednesday, August 10, 2011

தினை -- கூழோ, எதுவோ ...

இனிப்புச் சேர்க்கக்கூடாதவர்களுக்காக ... தினைக் கூழ் (?) / தினை உப்புமா (?) ... என்ன பெயர் சொன்னாலும் சரி.

1. தினையை வறுத்துத் திரித்துச் சலித்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கப்பி / திப்பி / கோது போக அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.




2. வேண்டிய நல்ல காய்களை எடுத்துக் கழுவி நறுக்கி எடுத்துக்கொள்ளவும். படத்தில் ப்ராக்கலி (broccoli) காட்டவில்லை. ஆனால் சமையலில் சேர்த்தேன்.


3. காய்களைக் கழுவி நறுக்கிச் சிறிது எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.


4. தயாரித்த தினைக்கூழைக் காய்கறிக் கலவையில் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

5. தேவையானால் ரொட்டித் துண்டுகளை எண்ணெயில்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். 


6. வறுத்த ரொட்டித் துண்டுகளை தினைக்கூழ் + காய்க் கலவையில் சேர்க்கவும்.
சுவையான, சத்துள்ள தினைக்கூழ் தயார்!

இப்படி வேண்டுமானாலும் செய்யலாம் ...

காய்க்கலவை, தினைக்கூழ், (சோயாத்) தயிர்க் கட்டி ... எல்லாவற்றையும் சுட்ட ரொட்டித் துண்டுகளின்மேல் வைத்தும் சாப்பிடலாம் ... . இங்கே உள்ள பச்சிலையின் பெயர் watercress.  நல்ல உறைப்புச் சுவை தரும்!

நல்ல உணவு!

No comments:

Post a Comment