Tuesday, August 9, 2011

கலிப்படம் -- விட்டேற்றி ...

எப்போது எது விட்டேற்றியாகிறது? புரியவில்லை.


ஒவ்வோர் ஆண்டிலும் என் பிறந்த நாளில் ஏதாவது ஒன்று தனிப்பட்டுத் தென்படும் -- அது என் கண்ணுக்கோ கருத்துக்கோ, எனக்காகவோ பிறர்க்காகவோ ... . இதை நான் விளக்கமுடியாது.  இந்த முறை  ... தாய்த் திருநாட்டுத் தமிழகத்தில் சிலநாள் தங்கியபோது ... வந்த ஒரு பிறந்த நாளில் எடுத்த படங்கள்.



1. தொட்டி(யி)(லி)ல் ...


2. "நான் வளர்ந்துகொண்டிருக்கிறேன்" என்ற அறிவிப்பு ...



3. பிரிய நினைப்பு ...

 


4. பிரிந்து நிமிர்ந்த நிலை ...

5. மடியின் சுமையை இழந்த நிலை ...


6. பசுமைச் சூழலில் ... தனிமை நிலை ...  


நிற்க ...

7. எனக்காக ... என் தோழியின் கணவர் இசைத்த "இனிய பிறந்தநாள்" வாழ்த்து: 
http://www.youtube.com/watch?v=9oO4hVXoomU

எல்லாம் போக ...  

இனிய ஆதரவாளர்கள் / நண்பர்கள் இருந்தால் ... வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்?

புறநானூற்றுப் பாடல் ஒன்று ... "பல்சான்றீரே" என்று தொடங்குவது, நினைவுக்கு வருகிறது.

தலைமுடி நரைத்தால் என்ன? முகத்தில் ... கன்னத்தில் ... கண்ணில் ... சுருக்கமோ வீக்கமோ உண்டானால் என்ன?   நண்பர்களின் அன்பும் உதவியும் ஏதோ ஒரு காடுவரை (இடுகாடு/எரிகாடு/சுடுகாடு/ ...) பிறருக்குச் சுமையில்லாமல் நமக்குத் துணையானால் போதும்; அதுவும் சரிதானே! :-)

நமக்கு இன்று இருப்பதை நன்றியுடன் சுவைப்போம்! :-) 
அன்புடன்,
ராஜம்








1 comment:

  1. தாமதமாயினும், பிறந்த நாள் வாழ்த்துக்கள், முதலில்,
    அடுத்த படியாக, அன்றொரு நாள், லாஸ் ஏஞ்செலஸ் அருங்காட்சி மையத்தில்,
    ஒரு முட்டையிலிருந்து குஞ்சு தானாகவே பொரித்து வரும் இயற்கை விந்தையைக்
    கண்டு, வியந்தேன், சில நிமிடங்கள் ஆகும் என்று நினைத்தேன். மணிக்கணக்காக, அந்த நிகழ்வு. முட்டையின் ஓடு. ‘டொக்’ ‘டொக்’ என்ற இனிய, மெல்லிய தட்டல். குஞ்சு உலகை பார்த்து வியக்கிறது. உங்கள் சித்திரத்தொடர் அந்த வகையே. படைப்பின் ரகஸ்யத்தை, ‘டொக்’ ‘டொக்’ என்ற லேசாகத் தொட்டுக் காட்டுகிறது. நன்றி.

    மூப்பு: மூப்பு வந்தடைந்தால், மூச்சிறைக்கிறது. எதற்கும் நரிவேரூஉத் தலையாரின்,
    ‘...அதுதான்
    எல்லோரு முவப்ப தன்றியும்
    நல்லாற்றுப் படூவு நெறீயுமா ரதுவே’

    என்ற அறிவுரையை மறக்க இயலுமோ?
    "யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." என்று மீண்டும் அழைக்க நினைத்தேன். நீங்களோ அழைத்தே விட்டீர்கள். நன்றி.

    ReplyDelete