Monday, August 8, 2011

கூல (== தானிய 'grains') வகையில் சில ...


இங்கே கலியில் கிடைக்கும் மில்லெட்டுக்குத் (millet) தமிழில் என்ன பெயர் என்று தெரிந்துகொள்ள முன்பு ஒருமுறை அல்லாடிவிட்டேன் -- அது நம்ம தமிழ்க் கம்போ சாமையோ என்று நினைத்து.

அப்பாடி ... ஒருவழியாக ... தாய்த்திருநாட்டுத் தமிழகத்தில் நான் பார்த்த எல்லாரையும் அலட்டித் தேடிப் பிடிச்சேன் -- கம்பும் தினையும்.

தெளிவாச்சு -- நம்ம தமிழ்க் கம்பும் தினையும் வெளிநாடுகளில் கிடைக்கும் மில்லெட் இல்லை.

[ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்களையும் கருத்துக்களையும் மொழிபெயர்க்கும்போது மக்கள் படும் பாடு ... கருத்துக்கள் சிதைந்துவிடும்! தமிழக நார்த்தங்காயை வெளிநாட்டில் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம். அதுவே "சிட்ரான்" என்ற பெயரில் ஒரு கண்றாவி ஊறுகாய் வடிவில் கிடைக்கும்.]

தமிழகத்தில் நான் பார்த்த நண்பர்கள் யாரும் இந்தக் கம்பையும் தினையையும் சமைத்திருக்கவில்லை. என் தொந்தரவுக்குப் பின் குறைந்தது அன்புமீனா வீட்டிலாவது நான் சொன்ன குறிப்புக்கள் வைத்துச் செய்த தினைப் பாயசம் அடிக்கடி "நேயர் விருப்பம்" ஆனது என்று தெரிந்தது. மீனாவின் கணவர் எனக்கு நன்றிகூடச் சொன்னார்! எனக்கு ஒரே பெருமிதம்!

இதுவரை பார்க்காதவர்களுக்காக .... இதோ தமிழ்நாட்டுக் கம்பும் தினையும் கேழ்வரகும்.
  
1. கம்பு ...  
 

2. தினை ... . நேரில் பார்க்கும்போது நல்ல அழகிய மஞ்சளாகத் தெரியும்.

 


3. கேழ்வரகு ... . கேழ்வரகு நல்ல தமிழ்ச்சொல்; அதை "ராகி" என்று சொன்னால்தான் இன்றைக்குப் பலருக்கும் புரியுது, என்ன செய்ய! "குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே." அதாவது ... வரகில் இரண்டு வகை இருக்ற மாதிரித் தெரியுது -- ஒன்று வெள்ளை; இன்னொன்று சிவப்பு. அந்தச் சிவந்த வகையே கேழ்வரகு.


இந்தப் பயிர்களைப் பலவகையில் சமைக்கலாம்.
 
"கருப்பட்டித் தினைப் பாயசம்" செய்முறை ... இன்னொரு நாளில் வரும்! :-)


No comments:

Post a Comment