Wednesday, August 31, 2011

பிள்ளையார் சதுர்த்தி -- 1

பிள்ளையாரே,

1. நீ உமையின் / பார்வதியின் உடம்பிலிருந்து வழித்து எடுத்த அழுக்குருண்டை என்று சொல்கிறார்களே.... அதுனாலெ ஒனக்கு ஒண்ணில்லெ ரெண்டு வெச்சுக்கோ ... ரெண்டு கருப்புப் பழம் என் படையல் ...


2. ஒன்னோடெ அம்மா பச்செ, அப்பா செவப்பு-ங்கறாங்களே ... அதுனாலெ ஒனக்கு ரெண்டு நெறத்துலெயும் படையல் ...



3. நீ இப்படிப் பிறந்திருப்பாயோ .. ரெண்டுங்கெட்டானாய் ... ? எதுன்னாலும் சரி, நான் கொடுப்பதை எடுத்துக்கோ!


4. அது சரி ... நீ எதோ மகாபாரதம் அப்டி-னு ஒண்ணு எழுத ஒன்னோடெ கொம்பெ ஒடெச்சுக்கிட்டயாமே? அந்தக் கொம்பெல்லாம் இப்படித்தான் என் நினைவுக்கு வந்துச்சுப்பா!   


சரி. முடிஞ்சப்போ ... உன் பேர் சொல்லி, உன் கண்ணுலெ காட்டி, நாங்க திங்க்றதுக்கு எதாவது பண்ணிப் படெக்கப் பாக்றேன். அது வரை சுத்தி அலையாம அந்த அரச மரத்து அடியிலேயே இரு, என்ன?

இல்லெ, இல்லெ, வேப்ப மரத்தடியிலும் ஒனக்கு இடமிருக்கு. அந்தப் படம் அப்றம் போடறேன்.



2 comments:

  1. அரசமரத்தடி பிள்ளையாரை நினைவுறுத்தியதிற்கு நன்றி. பிள்ளையாரின் நற்குணம் சிநேகிதம். வாத்ஸல்யம் அதில் உள்ளடக்கம். எல்லாவற்றிக்கும் மேலாக, he is non-judgemental. எனக்கு அவர் முதல் முதலாக தந்தது சிதற்தேங்காய். இந்த படைப்பில்/படையலில் ஒரு நுட்பம் கவனித்தீர்களோ? பக்தி (பக்தருக்கு பெண் பால்) பக்தியுடன் கொடுத்ததை வாங்கிக்கொள்வார். அந்த ஆனைமுகத்தானின் தாள் பணிந்து வணங்குவோமாக.

    ReplyDelete
  2. ஆஹா, மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள பிள்ளையார் நெடுநாள் நண்பர். பரிக்ஷைக்குப் போகையில் எடுத்துச் செல்லும் அட்டையில் இருந்து, பேனா, பென்சில், ஸ்கேல் வரை அவர் காலடியில் வைத்துக் கொண்டு செல்வோம். அன்னிக்குப் பேப்பர் ஈசி என்றால் பிள்ளையாருக்கு நன்றி அறிவிப்பும், பேப்பர் கஷ்டம் என்றால் பிள்ளையாருக்குத் திட்டும் கிடைக்கும். நல்லா வாங்கிக் கட்டிப்பார்.

    ReplyDelete