Monday, March 21, 2011

மதுரை முழுநிலா ... பங்குனியில் ...


அன்று வந்ததும் இதே நிலா?



இன்று வந்ததும் அதே நிலா?



மாற்றம் ...

தாழ் தெரு பெற்றது ... புழுதி ... குழல் விளக்கு ...


மேல் மாடி துறந்தது ... இனிய நிலாச் சோறு! 

Saturday, March 19, 2011

மதுரை இளவேனில் ...

"காலங்களில் அவள் வசந்தம்" -- கண்ணதாசன் காவியத்தை மறந்தவர்கள் இயற்கை அழகைச் சுவைக்கத் தவறியவர்கள்!

இந்த ஆண்டு என் சுவைக்கு விருந்தான சில இங்கே...

1. "மலர்களிலே அவள் மல்லிகை" ... மதுரையரசி!



2. விவேகம் ... இளமைக்கு வழிவிட்டு ...





3. நெளிவு சுளிவு வளைவுகளின் கொண்டாட்டம் ...




4. வேம்பூபூபூஊஊஊஊஊ ...





5. நிழலைத் தாங்குவோம் ...



6. யான் உனைத் தொடர்ந்தே ... ... ...



... ... ... சிக்கெனப் பிடித்தேன்!!



Sunday, March 13, 2011

என் மதுரை ...

எங்கள் குடும்ப நண்பர் ... நிழற்படக் கலை, வரைபடக் கலை இவைகளைத் தம் கண்ணிலும் கருத்திலும் கையிலும் வாங்கி, நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கொடையாளர் ... எல்லாவற்றிலும் மேலாக ... அன்பு உள்ளமும் இனிய பண்புமே வடிவானவர் ... இப்போது சென்னையில் வாழும் பழைய மதுரை மகன் ... திரு மனோகர் தேவதாஸ்.

மனோகரின் படைப்புகளுள் ஒன்று: Multiple Facets of My Madurai . முதல் பதிப்பு 2007. ISBN 13: 978-81-88661-62-6

அந்தப் படைப்பின் முகவுரைத் தொடக்கம்:

"This portfolio presents the city of Madurai in southern India through a collecion of intricately detailed pen and ink drawings with accompanying text. The book gives glimpses of the city's monuments and street houses, its temples and festivals, its surrounding countryside ... glimpses of the city's history, its traditions and its social ethos, often viewed nostalgically through the lens of my memory and art ... Above all this portfolio is an expression of one individual's love for his boyhood town."

பழைய கால (?!) மதுரையின் பல்வேறு சாயலைக் கண்ணையும் கருத்தையும் கவரும் 69 படங்கள் + விளக்கம் மூலம் வழங்கும் இந்தக் கருவூலத்திலிருந்து சில மணிகள் இங்கே...


1. நூலின் முதல் பக்கங்கள்









2. வடமேற்கு மதுரையில் ஒரு தெரு. நீர் மோர்ப் பந்தல்.



3. வடக்கு மாசி வீதியில் ...



4. மகாசதாசிவமூர்த்தி, 25 தலை 50 கைகளுடன் ...



5. அமெரிக்கன் கல்லூரி


இப்படிப் பல அழகு!