கொண்டைக்கடலைத் துவையல் (chickpea spread)
Chickpeas அல்லது garbanza beans என்பது நம்ம கொண்டைக் கடலைதான்! பெரிதாக வெள்ளையாக இருக்குமே, அது. அதை ஊறவைத்து நம்மூர்த் துவையல் (அல்லது மசியல்) போலச் செய்தால் hummus என்று சொல்லப்படும் மத்திய கிழக்குநாடுகளில் செய்யப்படும் spread கிடைத்துவிடும்.
1. கொண்டைக்கடலையைக் கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
(organic chickpeas சீக்கிரம் ஊறிவிடும். நன்கு பெரிதாகவும் மலரும்.)
2. ஊறின கடலையை வேகவைக்கவும்.
3. வெந்த கடலை ஆறிக்கொண்டிருக்கும்போது...
4. சிறிது Italian parsley அல்லது தமிழ்க் கொத்துமல்லித் தழையைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
5. சிறிது சீரகத்தையும் வெள்ளை எள்ளையும் (பச்சையாகவே) பொடித்துக்கொள்ளவும்.
6. ஒரு சிறிய பச்சை/சிவந்த மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
7. வெந்த கடலை, தழை, சீரக-எள்ளுப் பொடி, மிளகாய் -- இவற்றை ஒன்றாகச் சேர்த்து (கரகரப்பாகவோ, விழுதாகவோ விருப்பம்போல்) அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
8. ரொட்டியுடனோ, சோற்றுடனோ சாப்பிடுமுன், சிறிது எலுமிச்சைச் சாறும் (cold-pressed extra virgin) ஆலிவ் எண்ணெயும் கலந்துகொண்டால் சுவைகூடித் தெரியும்.
9. உப்புச் சேர்க்கத் தேவையில்லை. அது அவரவர் விருப்பம்!
Thursday, October 14, 2010
Tuesday, October 12, 2010
கீவிக் காய் ஊறுகாய்
உப்புக்குச் சப்பாணி recipes - 1: கீவிக் காய் ஊறுகாய்
1. நன்கு கழுவிய கீவிக் காய்கள்:
2. காய்களின் குறுக்குவெட்டுத் தோற்றம்:
3. மேல் தோலைச் சீவவும்:
4. நீளவாக்கில் சுமாரான பருமன் கொண்டதாக நறுக்கவும். தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் (பிற ஊறுகாய்களுக்குப் போடுவதுபோல்) போட்டுக் கலக்கவும்:
5. கைபடாதவாறு கரண்டியால் எடுத்து ஒரு மண் பாத்திரம் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கீவிக் காய் நல்ல புளிப்புக்கொண்டது. அதனால் தனிச் சோற்றோடோ, தயிர்ச்சோற்றோடோ சாப்பிட அருமையான சத்து நிறைந்த ஊறுகாய் இது.

Monday, October 11, 2010
வெய்யில்... கண்ணைக் கூசுகிறது...
நல்லவேளை... தாவணித் தலைப்பு இருக்கு...
"தாவணி"யா? அப்டின்னா என்ன? "சல்வார் கமீஸ்" போடறவங்களும்
போர்த்திக்கொள்ள வேண்டிய உடல் உறுப்புக்களைப் போர்த்திக்கொள்வதாகத் தெரியலையே!
Subscribe to:
Posts (Atom)