Wednesday, December 15, 2010

Avocado ... my way...

ஆவொக்காடோ (Avocado) என்ற பச்சைப் பழம் சாப்பிட ... நம்மில் சிலருக்குப் பழக நாளாகும்.


இந்தப் பச்சைப்பழம் மிகவும் சத்துள்ளது.

1. ஆவொக்காடோ முழுமையாக...



சரி பாதியாகப் பிளந்தது ...




2. சிறு கத்தியால் மென்மையாகக் கீறிக்கொள்ளவும்.



3. சிறு கரண்டியால் சதைப்பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும்.



4. உடனே எலுமிச்சைச் சாறு கலந்துவைக்கவும். (ஆவொக்காடோவின் பச்சை நிறமும் சத்தும் கெடாமல் இருக்க இந்த எலுமிச்சைச் சாறு தேவை.)

5. சிறு பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்ப), தக்காளித் துண்டுகளைக் கலக்கவும்.



6. பச்சைக் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.





7. ரொட்டித் துண்டில் தடவிச் சாப்பிடுவது ஒரு வழி.

மதுரை -- அன்றும் இன்றும்...

1. அன்று ... பொற்றாமரைக்குளம்...



1.a. இன்று ... பொற்றாமரைக்குளம் ...



2. அன்று ... வண்டியூர் தெப்பக்குளம் ...



2.a. இன்று ... வண்டியூர் தெப்பக்குளம் ...




3. அன்று ... தெற்குச் சித்திரை வீதி ...



3.a. இன்று ... ... தெற்குச் சித்திரை வீதி ...







4. புதுமண்டபம் ...


5. கீழ்ப் பாலம்...



6. மைய மண்டபம்...



காலாரக் கவலையின்றித் திரிந்த இடங்கள் இப்போ எங்கே?

Tuesday, December 14, 2010

இனிப்புப் பருப்பு...

வீட்டில் இருந்த சில பருப்புக்கள் (walnut + pecan) வைத்துச் செய்தது...

1. வால்நட் (walnut), பீக்கான் (pecan) பருப்புக்களைத் தேவையான அளவு எடுத்து, புடைத்து, தேவையானால் கழுவியும் எடுத்துக்கொள்ளவும்.

2. பருப்புக்களை ஒரு நல்ல சட்டியில் எண்ணெய் இல்லாமல் சிறிதளவு பொன் நிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வால்நட் பருப்பு, வறுத்தது:



பீக்கான் பருப்பு, வறுத்தது:



3. ஒரு நல்ல பாத்திரத்தில் 3 கோப்பை பனங்கல்கண்டை (== கருப்பட்டி or brown sugar) 5 கோப்பைத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்துப் பாகு செய்துகொள்ளவும். (வெல்லம் நன்றகக் கரைந்து தண்ணீர் வற்றினால் போதும். பாகு கம்பிப் பதம் ஆகவேண்டும் என்ற தேவை இல்லை.)

4. வெல்லப் பாகில் 3~5 ரோஸ்மேரி (rosemary) தழைகளைப் போட்டு ஊறவிடவும்.

Rosemary:



5. விரும்பினால்... வெல்லப் பாகில் சிறிது இஞ்சித் தூள் (ginger powder), மிளகு பொடி (black pepper), லவங்கப் பட்டைத் தூள் (cinnamon powder), கிராம்பு (cloves) இவற்றைச் சிறிய அளவில் கலக்கவும்.

6. பருப்புகளை வெல்லப்பாகில் போட்டுக் கலக்கவும்.



7. Conventional oven அல்லது microwave oven-இல், குறைந்த அளவு சூட்டில், 15-20 மணித்துளிகள் சூடாக்கி எடுத்துக்கொள்ளவும்.

8. ரோஸ்மேரித் தண்டுகளை எடுத்துவிட்டு, இனிப்புப் பருப்புக் கலவையைச் சிறிய தாள் கிண்ணங்களில் பரிமாறவும்.

Sunday, December 12, 2010

இட்டிலி -- வேற மாதிரி இட்டிலி ...

இதென்ன இட்டிலியா??? ஆமாம்! இது எனக்கு இட்டிலிதான்!!

இட்டிலி வேணும். ஆமாம் ... கட்டாயம் இட்டிலி வேணும். ஆனா ... மாவறைக்க முடியலெ; கடெய்ல மாவு வாங்கலாம்-னா அதுலெ ... என்னத்தெயோ eno-வாமே அதெப் போட்டு ... தானாப் பொங்க வேண்டிய மாவெத் தடியாலெ அடிச்சுப் பொங்க வச்ச மாதிரி ... .


சரி. வேற மாதிரி இட்டிலி செய்து பார்க்கலாம்.  
1. "நூடுல்"-னு சொல்றதுலெ ஒரு நல்ல வகை. இங்கே எடுத்துக்கொண்டது ஊடான் நூடுல் (udon noodles) என்ற வகை.






2. தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.  (15~20 குச்சிகள் எடுத்துக்கொள்ளலாம்.)

3. சிறு ஒரு அங்குல நீளத் துண்டுகளாக ஒடித்து, எண்ணெயிலாத சட்டியில் போட்டுப் பொன் நிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

4. மக்காச்சோளக் குருணை ஒரு சிறிய கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.


(இங்கே பயன்படுத்திய மக்காச்சோளக் குருணை.)


5. சோளக்குருணையை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும்.

6. பொடித்த நூடுல் + சோளக்குருணை இரண்டையும் கலந்து, 2~3 பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்றபடி), சிறு இஞ்சித் துண்டுகள், பச்சைக் கறிவேப்பிலைத் தழை சேர்த்து, 1~2 சிறிய கோப்பை அளவு (சோய்) தயிரில் 20~25 மணித்துளிகள் ஊறவைக்கவும்.



7. இட்லியை வேகவைப்பது போல் வேகவைத்து எடுக்கவும்.

(இங்கே மர நிறத் தாளில் செய்த சிறு கிண்ணங்களில் நூடுல் கலவையை ஊற்றியது.)



8. வெந்த இட்டிலி.







9. மிளகாய்ப் பொடி தடவியது...


சுவையானது!

காலையும் நீயே ... மாலையும் நீயே ...

என் செயற்கை வீட்டுச் சூழலில் ... ... ... காட்சியும் நீயே ...

1. கதிர் ஒளி பிறப்பதாய்க் காட்சி தந்தாயே....


2.   பொன்னும் சிவக்கும் எனப் பொருள் உரைத்தாயே ... ... ... 






3. இதோ நான் என "மதி" காட்டினாயே...





நீயே என் துணை! இயற்கையழகே! என்னோடு எப்போதும் இரு. இதுவே என் வேண்டுதல்!

ரசம் -- எளிமையான ரசம்

புளி இல்லாத ரசம்...

1. இரண்டு கோப்பை அளவு துவரம் பருப்பை எடுத்து, கழுவி, குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (நல்ல பருப்பாக இருந்தால் குழையும்போது ஒன்றுக்கு மூன்று மடங்காகப் பெருகும்.)

(மாதிரிக்கு ... 1/3 கோப்பை அளவுள்ளது இங்கே. இதன் கொள்ளளவு 80 milliliter என்று தெரிகிறது.)



2. குழைந்த பருப்பில் 2/3 பங்கு எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நீர்க்கக் கரைத்து எடுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.

3. ஒரு தக்காளியை இரண்டு பகுதிகளாக நறுக்கிக் கொள்ளவும்.




4. ஒரு பகுதித் தக்காளியைச் சுத்தமான கைவிரல்களால் பிசைந்து எடுத்துக்கொள்ளவும். இன்னொரு பகுதியை 4~6 சிறு துண்டுகளாக நறுக்கித் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

5. ஒரு நல்ல பாத்திரத்தில் ... பிசைந்த தக்காளி, 2~3 பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்றபடி), 2 teaspoon ரசப் பொடி, 3 நடுத்தர அளவு கோப்பைத் தண்ணீர் இவற்றைக் கலந்து கொதிக்கவைக்கவும்.



6. மேலே காணும்படி ரசக் கலவை நுரைத்துக் கொதிவரும்போது, அடுப்புச் சூட்டைத் தணிக்கவும்.

7. நீர்க்கக் குழைத்த பருப்பை ரசக்கலவையில் சேர்க்கவும். (ரசம் நீர்க்க இருக்கவேண்டும் என்று விரும்பினால், ஒரு சிறிய கோப்பை அளவு தண்ணீரை இப்போது சேர்க்கலாம்.)

8. சிறிதாக நறுக்கி வைத்த தக்காளித் துண்டுகளையும் சேர்க்கவும்.

9. சிறிய அளவு (1/2 teaspoon அல்லது தேவைக்கேற்றபடி) மிளகும், 1/4 teaspoon சீரகமும் பொடி செய்து ரசக் கலவையில் சேர்த்து, ரசக் கலவையை மெல்ல ஒரு தடவை கிளறிவிடவும்.

10. அடுப்புச் சூட்டைச் சிறிய அளவில் கூட்டி, ரசக்கலவையைக் கொதிக்கவிடவும்.

11. ரசக் கலவை கொதித்து நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிடவும்.

12. சிறிதளவு எலுமிச்சைச்சாறு (2 table spoon அல்லது அவரவர் தேவைக்கு ஏற்றபடி) கலக்கவும்.

13. கறிவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.

14. கடுகு தாளிக்கவும்.



சுவையான ... "மணமும் குணமும் நிறைந்த" ரசம் தயார்! நல்ல பசியே தேவை! :-)

Saturday, December 11, 2010

பெர்சிமனும் பச்சை ஆப்பிலும்...

என் கையில் பட்ட பாடு!

1. பெர்சிமன் (persimmon) ஊறுகாய் ...



2. பச்சை ஆப்பில் (Granny Smith green apple) கலவை யுடன் தாளித்தது...



குறிப்பு: இது ... ஆத்திர அவசரத்துக்கு மட்டுமே! பச்சையா சாப்பிடறது நல்லது!