Saturday, October 16, 2010

வித்தியாசமான தொக்கு...

இது cranberries தொக்கு என்று வைத்துக்கொள்ளலாம்.

1. நல்ல organic cranberries வாங்கிக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.



2. அடிப்பிடிக்காத ("கனமான அடிப்பாகம் உள்ள") ஒரு "எவெர்ஸில்வர்" பாத்திரத்தில் சிறிது எண்ணெய் (ஆலிவ் அல்லது நல்லெண்ணெய்) ஊற்றிச் சிறிது கடுகு தாளிக்கவும்.

3. கடுகு தாளித்தவுடன், cranberries-ஐ அந்தப் பாத்திரத்தில் போட்டு, சிறிது உப்பும் போட்டு, பாத்திரத்தை மூடி, இளஞ்சூட்டில் வேகவைக்கவும். தண்ணீர் ஊற்றவேண்டாம்.



4. ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை எடுத்துவிட்டு cranberries-ஐக் கிளறிவிடவும். 2~3 teaspoon மிளகாய்ப்பொடியும் மிகவும் கொஞ்சமாகப் பெருங்காயமும் கலந்து, தொடர்ந்து வேகவிடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டிருக்கவும். கஷ்டமிருக்காது.


5. சுருள வதக்கி எடுத்துவைத்துக்கொள்ளவும்.


6. சுவைத்துச் சாப்பிடலாம்!

3 comments:

  1. Aiyah
    Cranberry enral enna? enge kidaikkum?
    Jana

    ReplyDelete
  2. பச்சை ஆப்பிள் தொக்கு அங்கே மெம்பிஸில் இருக்கையில் செய்தேன், மாங்காய்த் தொக்குக்கும் அதற்கும் வித்தியாசமே இல்லை. சுவையாக இருந்தது.

    ReplyDelete
  3. Cranberries are available in Europe and in the U.S.

    Details: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=145

    ஆமா, கீதாம்மா, நானும் பச்சை ஆப்பிள் தொக்கு செய்திருக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கும்.

    ReplyDelete