Thursday, October 14, 2010

கடலைத் துவையல்

கொண்டைக்கடலைத் துவையல் (chickpea spread)

Chickpeas அல்லது garbanza beans என்பது நம்ம கொண்டைக் கடலைதான்! பெரிதாக வெள்ளையாக இருக்குமே, அது. அதை ஊறவைத்து நம்மூர்த் துவையல் (அல்லது மசியல்) போலச் செய்தால் hummus என்று சொல்லப்படும் மத்திய கிழக்குநாடுகளில் செய்யப்படும் spread கிடைத்துவிடும்.

1. கொண்டைக்கடலையைக் கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
(organic chickpeas சீக்கிரம் ஊறிவிடும். நன்கு பெரிதாகவும் மலரும்.)


2. ஊறின கடலையை வேகவைக்கவும்.


3. வெந்த கடலை ஆறிக்கொண்டிருக்கும்போது...
4. சிறிது Italian parsley அல்லது தமிழ்க் கொத்துமல்லித் தழையைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
5. சிறிது சீரகத்தையும் வெள்ளை எள்ளையும் (பச்சையாகவே) பொடித்துக்கொள்ளவும்.
6. ஒரு சிறிய பச்சை/சிவந்த மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.


7. வெந்த கடலை, தழை, சீரக-எள்ளுப் பொடி, மிளகாய் -- இவற்றை ஒன்றாகச் சேர்த்து (கரகரப்பாகவோ, விழுதாகவோ விருப்பம்போல்) அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  


8. ரொட்டியுடனோ, சோற்றுடனோ சாப்பிடுமுன், சிறிது எலுமிச்சைச் சாறும் (cold-pressed extra virgin) ஆலிவ் எண்ணெயும் கலந்துகொண்டால் சுவைகூடித் தெரியும்.

9. உப்புச் சேர்க்கத் தேவையில்லை. அது அவரவர் விருப்பம்!

3 comments:

  1. அருமையம்மா.......அழகான படங்கள்........புதிய வகை துவையல்.......நன்றி.முயற்சி செய்து பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. பிரமாதம். உப்பு தேவையில்லை.

    ReplyDelete
  3. அட!இதுவரை கேள்விப்பட்டதில்லை, செய்து பார்க்கணும்!

    ReplyDelete