Wednesday, September 7, 2011

புதுவையில் ஒரு நாள் ...

இன்றைய புதுவை/பாண்டிச்சேரிக் கடற்கரை ஒன்றும் அவ்வளவு வியப்பூட்டுவதாகத் தோன்றவில்லை. கடற்கரை மணல் என்று ஒன்றும் நிறைய இல்லை -- கீழே விழாமல், மணலில் காலழுத்தி நடக்கலாம் என்ற நம்பிக்கையுடன் போய்ப் பார்த்த எனக்கு ஏமாற்றமே.

சரி. பக்கத்தில் ஏதோ ஓர் ஊர், வீராம்பட்டினமாம், கடற்கரை இருக்காம், அங்கே போகக்கிடைத்தது - நன்றி: நண்பர்கள் ழான், மணிவண்ணன், மணிவண்ணன் துணைவி ஆஷா, வண்டியோட்டி கஜா எல்லாருக்கும்.

நாங்கள் போன நாள் கிறித்தவர்களுக்குப் புனிதமான வெள்ளிக்கிழமை. கடற்கரையில் கோலாகலம் ஒரு பக்கம், அமைதி ஒரு பக்கம்.

1. குழந்தைகள் விளையாட்டுப் போட்டி ...
2. வானும் கடலும் உறவாடும் கலப்பில் ...
3. அதோ அந்தப் பறவைபோல நான் பறக்க வேண்டும் ...

4. பறந்து நான் வேண்டுமிடம் அமர வேண்டும் ...


5. கோயில் ...6. கணினி நிலையம் ... லெமூரியாவின் பெயர் சொல்லி ...இந்தப் பகுதிகளில் எல்லாம் -- கடற்கரை, வீதி என -- பாரதி என்றாவது ஒருநாள் அலைந்து திரிந்திருப்பாரோ?


3 comments:

 1. 1. இந்த மாணவ சமுதாயம் தேசத்தை உஜ்ஜீவிக்கப்போகிறது. நாலு பேரை கொடுங்கள். நாலு ஐ.ஏ.எஸ் ஆச்சு.
  2. உறவு கொண்டாடவில்லை; கலந்து விட்டனர்.
  3. நானும் தான்.
  4. மறுபடியும் பறக்க ஹேதுவாக.
  5. ஹீராபூர் யோகினிகளை நினைத்துக்கொண்டேன்.
  6. லெமூணினி!

  ReplyDelete
 2. கடற்கரையைச் சுத்தமாய்க் காணமுடிகிறது.

  ReplyDelete
 3. பாண்டிச்சேரி கடற்கரையில் மணல் எப்போதுமே அரிதான ஒன்றுதான். அதுவும் சாலை 10-12 அடி உயரத்தில் இருக்கும் நிலை. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர்தான் கீழே இறங்கி, தண்ணீரில் காலை நனைக்க முடிந்தது. அப்போதே, தண்ணீருக்கும் சாலையின் தடுப்புச் சுவருக்கும் இடையில் மிஞ்சிப் போனால், ஒரு ஏழெட்டு அடிகள்தான் மணலிருந்ததாக ஞாபகம். பிறகு, மக்கள் கீழே இறங்குவதைத் தடை செய்துவிட்டார்களா அல்லது கீழே இறங்கிப்போவது அவ்வளவு நல்லதல்ல என்று மக்களே இறங்கிச் செல்வதை நிறுத்தி விட்டார்களா எனத் தெரியவில்லை. எனினும், இந்தப் பகுதி மிக ஆழமான பகுதி என்றும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே, அதிகம் பேர் இங்கே கடலில் கால் நனைக்க விரும்புவதில்லை. அதருக்கு வாய்ப்புமில்லை.
  பிறகு, அரசாங்கமே கடற்கரை ஓரச் சாலையைப் பாதுகாத்திட, அந்த குறுகிய மணற்பரப்பில் பெரிய, பெரிய பாறாங்கற்களைப் போட்டு, சமீபத்திய வருடங்களில் அதன் மேலும் மணலைக்கொட்டி, அழகுக் குடைகளுடன் கூடிய உட்காருமிடங்களை அமைத்திட்டது.
  நீங்கள் கூறியது போல, மணலிலே நடந்து, கடல் நீரிலே காலை நனைத்திட பாண்டிச்சேரிக்கு வடக்கிலோ அல்லது தெற்கிலோ சென்றிட வேண்டும்.

  பாபு கோதண்டராமன்

  ReplyDelete