Saturday, September 17, 2011

எங்கும் நிறைந்தாயே ...

நிறைந்திருக்கும் அதன் பெயர் அவரவர் கருத்துக்கு ஏற்றபடி ... இறைப் பொருளோ, இயற்கையோ, அழகோ ... அதைக் கண்டு சுவைக்க நான் தவறுவதாக இல்லை!

1.   வண்டி விரைந்து ஓடிய வழியில் ...



2.   திருச்சி ... மலைக்கோட்டை ... உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் (?) கோயில்கள் ...



3. விராலிமலை ...



4.   ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரில் ... கவலையில்லாமல் ... வேம்படி விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் ...



5. வானும் மலையும் நிலனும் உறவாட ...








பத்துப் பனிரெண்டு இல்லாவிட்டாலும் ... ஏதோ ஒண்ணு ரெண்டு தென்னை மரம் பக்கத்திலே இருக்கு!





காற்று வெளியிடையே ...



6. உசிலம்பட்டிக்குப் பக்கத்தில் ... . இது 'இ' சாருக்காக ...




7. "அசலை" நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோமே! ...






 

8. எங்கள் எழுத்து ... இயற்கையின் தலையெழுத்து ... 






9. வானவில் ... வாழ்க்கையின் அழகையும் நிலை(யா)மையும் காட்டி ... 


10. சிறு வயதிலிருந்தே காதல் ... இந்த ஆனைமலைமேல்! இப்போ ... கடன் வாங்கி ஒரு நிலம் வாங்கிப் போட்டுவிட்டேன், அது சரியோ தவறோ! ஒரு தமிழ்க் கூடம் கட்ட ஆசை! ஆசை யாரை விட்டது? என்னை அது என்றுமே விடாது! தமிழன்னை என்னைக் காக்கவேண்டும். 





குறிப்பு: கடைசி மூன்று படங்கள் தவிர மத்தது எல்லாம் ... விரைந்து ஓடும் வண்டியின் கண்ணாடிச் சன்னல் வழியே எடுத்தவை. எங்கும் நிறைந்த இயற்கையை அகத்தினுள் பிடித்துவைக்க முயற்சி தேவையில்லை; ஆனால் அதை வெளிப்படுத்த எவ்வளவு முயலவேண்டியிருக்கிறது! ஆனாலும் அந்த முயற்சி நல்ல பலன் கொடுக்கிறது!

என் உயிருள்ளவரை இயற்கையைச் சுவைத்து வணங்கி மகிழ்வேன்.



Friday, September 16, 2011

சிறு தோட்டம் ... பெரு நாட்டியம் ...


ஒரு குருவிக்கதை.

இது நம்மூர்ச் சிட்டுக்குருவி இல்லை. சரியான பெயர் தெரியாது. அதனால் இது என் "பெருங்குருவி." அடிக்கடி வரும் போகும் ஒற்றையும் இரட்டையுமாக. நேற்று மட்டும் இரண்டு ஒன்றை ஒன்று விரட்டிப் பிடிக்கும் விந்தையைப் பார்த்தேன். மற்றபடி, இப்போதைக்கு இந்த ஒற்றை மட்டுமே ஒவ்வொரு நாளும் தென்படுகிறது. 

விழியம் பார்க்க: ( http://www.youtube.com/watch?v=NvnpXw5yFQc)

[எனக்கு meditation செய்ய வேற வகை yoga tape தேவையில்லை. இது போதும்.]

இது எப்போதும் இவ்வளவு "குண்டாக" இருக்காது. என்னவோ நடந்திருக்கிறது! சீக்கிரமே முட்டைகள் வெளியே வரலாம்?! அதற்கும் தயாராக என் வீட்டு இறையில் ஒரு கூடு.  

4 ~ 5 ஆண்டுகளாகவே இருக்கு. பல பக்கத்து வீடுகளில் பூனை வளர்ப்பு. அந்தப் பூனைகளுக்குத் தப்பி இங்கே ஒரு புகலிடம்! எனக்குப் பெருமிதம்.



சில ஆண்டுகளுக்கு முன் ... முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சைப் பறக்கவைக்க ஒரு தாய்ப் பறவை(?) செய்த முயற்சி என்னைச் சிலிர்க்கவைத்தது. தாய்ப் பறவை எங்கேயிருந்தோ இன்னொரு பறவை(தந்தைப் பறவை?)யைக் கூட்டி வந்தது. பிறகு தன் கூரிய அலகால் குஞ்சின் அலகைப் பிடித்து ஆட்டி ஆட்டி ஆட்டி அதைக் கூட்டிலிருந்து வெளியே வரவைத்தது. இரண்டு பெரிய பறவைகளுமாகச் சேர்ந்து அந்தக் குஞ்சைக் கூட்டிலிருந்து வெளியே எடுத்துப் போயின. இதையெல்லாம் என் சமையலறைச் சன்னல் வழியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இயற்கையின் படைப்பில்/அழகில் வாயடைத்துப் போனது; கண்களில் கண்ணீர்; நெஞ்சில் கசிவு.

பிறகு ... ஒரு முறை ... வெளியே வந்தபோது ... ஒரு முட்டை கீழே விழுந்து உடைந்து சிதறியிருந்தது பார்த்து ... மனது துணுக்குற்றது. எப்படி நடந்திருக்கும், பாவம், என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டேன். 

முட்டை உடைந்து கறைப்பட்ட தரையைத் துப்புரவாக்க எவ்வளவு முயன்றும் கறை போக மறுக்கிறது -- இன்றும் ... பல ஆண்டுகள் கழித்தும்!  


மிகைப்படுத்தாமல் சொல்கிறேன் ... முட்டை உடைந்து சிதறிய அந்த ஆண்டில்தான் என் பொருளாதார நிலை சரியத் தொடங்கியது; இன்னும் மீண்டு சமநிலைக்கு வரவில்லை.


குருவி ஜோசியமோ??

முதுசொம் அருமை ... பாரதி நூலொன்று ...


என் சிறையில் ...


1. நூலின் உள்ளே காணும் படம் ...




2. நூலின் அறிமுகம் ... . கூர்ந்து பாருங்கள் ... ஆண்டு, விலை எல்லாம். இரண்டாம் பதிப்பு 1500 படிகள். 1499 படிகள் எங்கே போயின?




3. நன்றி: நூலை வாங்கிப் பாதுகாத்த என் தந்தைக்கும் தாய்க்கும், அதை என் கூடவே கட்டி இழுத்துவரும் எனக்கும்தான் (why not!!??). :-) "கிரந்த" எழுத்து எதிர்ப்பாளர் என் அருமைத் தந்தையின் எழுத்தைப் பொறுப்பாராக! :-)



இதேபோன்ற பழைய நூல்கள் பல வகை, பல காலத்தவை ... கைவிட்டுப் போயின -- தெரிந்தும் தெரியாமலும். இன்னும் ஒரு சில எங்கோ ஒரு வீட்டுச் சேந்தியில். மனம் மட்டும் அவற்றின்மேல்.

Saturday, September 10, 2011

பருவம் என்னைத் தள்ளிவிட்டது ...

இதையே ... பண்டைத் தமிழில் "யாமும் உள்ளேம்" என்று சொல்லலாம்.

குருவி, புறா, பூனை, நாய், ... , செடி, கொடி, மரங்களைப்போல நம்முடன் உறவாடுவதில் ஈடு இணை வேறு எதுவும் இல்லை; அதெல்லாமே பேசாமல் பேசும்!


1. நான் பூத்துவிட்டேன் ...






2. இங்கெ பாருங்க ... எனக்கு எந்த வசதியும் இல்லெ -- தண்ணி குடுக்க ஒரு தளிர்கூட இல்லெ. ஆனாலும் ... பருவம் என்னைத் தள்ளிவிட்டது ... . இனி ... நான் ... எங்கேயோ? யார் கையிலோ?







3. நீ பார்க்காவிட்டால் என் இளமை காத்திருக்குமா? நான் காய்த்துவிட்டேன் ... . ( நிலத்திலிருந்து இரண்டு அடிக்கும் குறைவான கிளையில்! )





4. ஏனய்யா ஆப்பிலுக்கும் ஆரஞ்சுக்கும் என்று ஒப்புமை? எனக்கும் ஆப்பிலுக்கும் ஒப்புமை பாருங்க ... .





எல்லாமே என் வீட்டுத் தோட்டத்தில் நடந்த கதை!

இயற்கைக்கு என் நன்றி!

Thursday, September 8, 2011

அடை காக்க ...



அன்பின் மோகனின் "படிப்பின் வாசனை"ப் பதிவில் சொன்ன குருவிக்கதை என் மனதைத் தொட்டது. தாய்க்குருவி ஒன்று ஏதோ சொன்னதாக அவர் உணர்ந்திருக்கிறார். அது எனக்கு முழு உடன்பாடே.

நானும் ... குருவிகள், புறாக்கள், செடி கொடிகள் ... எல்லாம் என்னிடம் பேசுவதுபோல் ... சிறுவயதிலிருந்து எப்போதும் உணர்ந்துவருகிறேன். 

இப்போதைக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டு. 

என்னைப் போன்றவர்கள் புறாக்களை வீட்டில் வைத்து வளர்ப்பதில்லை.  வெளியே திரிந்துவரும் புறாக்களைப் புண்படுத்துவதும் இல்லை.  

சில இடங்களில் இந்தப் புறாக்கள் கூடுகட்டியோ கட்டாமலோ ரொம்பத் தொந்தரவு கொடுக்கும் ... பொய்யில்லை! ஆனால் அதற்காக அந்தப் புறாக்களைத் தொந்தரவு செய்ததேயில்லை. 

பல ஆண்டுகளுக்கு முன்னால் ... 

வட கலிபோர்னியாவில் ஒரு சின்ன ஊரில், அமைதியான ஒரு சின்ன அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு. மிக அழகிய இடம்.  


அங்கே மயில் ஒன்று இருந்தது. அவ்வப்போது தலைகாட்டும்! ஒரு நாள் அது ஊரின் நடுவே ஒய்யாரமாக நடந்து சென்றபோது ... போக்குவரத்து நின்றது உண்மை, பொய்யில்லை.  
 
வருவாய் தரும் வேலைக்காக என்று ஒவ்வொரு நாளும் ~ 130 மைல் தொலைவு காலையும் மாலையுமாக வண்டி ஓட்டிப் போய்வர வேண்டியிருந்தது. காலையில் 65 மைல் ட்ரைவ்; மாலையில் அதே. சில மழை நாட்களில் 2.5 மணி நேரம் கூடுதலாகப் பாலம் கடக்க வேண்டியும் இருந்த நிலை. அதோடு வயதின் தளர்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டிருந்த நேரம் -- மெனோபாஸ் (menopause) என்பார்களே அது. வாழ்க்கையில் பல பல குழப்பம்.

இந்த நிலையில் ... வேலை கிடைத்த இடத்திற்குப் பக்கத்தில் வீடு பார்க்கத் தொடங்கினேன். அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு ஏதோ ஓர் இடம் கிடைக்கும்போல் தெரிந்தது.

இதற்கிடையில் ... கால நிலைகள் (seasons) கடந்திருக்கின்றன என்னைக் கேட்காமலே!  

 
குடியிருந்த வீட்டின் வெளி மாடியின் பக்கம் குளிர்/பனி/மழை காரணமாகப் பல நாட்கள் போகாமல் இருந்திருக்கிறேன், எனக்கே தெரியாமல். 

வீட்டைக் காலி செய்யவேண்டும் என்றால் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினேன். 

அப்போது ... பல குளிர் மாதங்களுக்குப் பின் வெளி மாடிக்குப் போனேன். 

அப்போது பார்த்தது ... உடலையும் மனதையும் சிலிர்க்க வைத்தது ... .



இப்போது இந்த வீட்டைக் காலி செய்து நான் போனால் ... இந்த முட்டைகளைத் தூக்கி எறிந்துவிடுவார்களே.  

சரி, இந்த முட்டைகள் குஞ்சுகள் ஆகும்வரை ... வீடு மாற்றும் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று முடிவு.

அதுமுதல் ... அந்த முட்டைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு பறவை வந்து அந்த முட்டைகளின்மேல் உட்கார்ந்து அடைகாக்கும். நான் அங்கே போனால் அச்சத்துடன் பறந்துபோகும். அதனால் வெளியே போய்ப் பார்த்துக் குறுக்கிடமாட்டேன்.

வியப்பான உண்மை ... இரண்டு பறவைகள் -- அவை அந்த முட்டைகளின் தாயும் தந்தையுமாக இருக்கவேண்டும். ஒன்று வெளியே பறந்து போய்க் கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிவரும். அதுவரை இன்னொன்று அந்த முட்டைகளின்மேல் உட்கார்ந்து அடைகாத்துக்கொண்டிருக்கும். இது நான் பார்த்துப் பார்த்து வியந்து போற்றிய உண்மை!

அந்த முட்டைகளையும் தாய்/தந்தைப் பறவைகளையும் தொல்லை செய்யாமல் காத்திருந்து ... ஒரு நாள் வெளியே எட்டிப் பார்த்தேன் ... முட்டையிலிருந்து பஞ்சுப் பொதிபோல ...  

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு அந்தச் சிறு குஞ்சுகளுக்குத் தாய்/தந்தைப் பறவைகள் பறக்கக் கற்றுக்கொடுத்ததையும் பார்த்தேன். முடிந்த அளவு படமும் பிடித்தேன்.

மேலே உள்ள ஒவ்வொரு படத்திலும் பாருங்கள் ... குஞ்சுகளின் வளர்ச்சியோடு ... அவை வளர்ந்த தொட்டியைச் சுற்றிய புழுக்கையின் அளவையும்! தாய்/தந்தைப் பறவைகளின் அட்டகாசம்!

வீட்டைக் காலி செய்தபோது ... அந்த இடத்தைத் துப்புரவு செய்ய எனக்கு ஆன செலவு 300 டாலர் (அந்தக் காலத்தில் அது ரொம்பப் பெரிய தொகை!). ஆனால் ... மகிழ்ச்சியும் மன நிறைவும் கணக்கில் அடங்கா!





Wednesday, September 7, 2011

புதுவையில் ஒரு நாள் ...

இன்றைய புதுவை/பாண்டிச்சேரிக் கடற்கரை ஒன்றும் அவ்வளவு வியப்பூட்டுவதாகத் தோன்றவில்லை. கடற்கரை மணல் என்று ஒன்றும் நிறைய இல்லை -- கீழே விழாமல், மணலில் காலழுத்தி நடக்கலாம் என்ற நம்பிக்கையுடன் போய்ப் பார்த்த எனக்கு ஏமாற்றமே.

சரி. பக்கத்தில் ஏதோ ஓர் ஊர், வீராம்பட்டினமாம், கடற்கரை இருக்காம், அங்கே போகக்கிடைத்தது - நன்றி: நண்பர்கள் ழான், மணிவண்ணன், மணிவண்ணன் துணைவி ஆஷா, வண்டியோட்டி கஜா எல்லாருக்கும்.

நாங்கள் போன நாள் கிறித்தவர்களுக்குப் புனிதமான வெள்ளிக்கிழமை. கடற்கரையில் கோலாகலம் ஒரு பக்கம், அமைதி ஒரு பக்கம்.

1. குழந்தைகள் விளையாட்டுப் போட்டி ...




2. வானும் கடலும் உறவாடும் கலப்பில் ...




3. அதோ அந்தப் பறவைபோல நான் பறக்க வேண்டும் ...





4. பறந்து நான் வேண்டுமிடம் அமர வேண்டும் ...


5. கோயில் ...



6. கணினி நிலையம் ... லெமூரியாவின் பெயர் சொல்லி ...



இந்தப் பகுதிகளில் எல்லாம் -- கடற்கரை, வீதி என -- பாரதி என்றாவது ஒருநாள் அலைந்து திரிந்திருப்பாரோ?


Wednesday, August 31, 2011

பிள்ளையார் சதுர்த்தி -- 2

1. வேம்படி விநாயகர் ...




2. விநாயகருக்குப் படையல் ... . கொஞ்சம் களிமண், கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் தண்ணி எல்லாம் கலந்து செய்யறோம் ...




அன்புக்கு வரையறை ஏது? அதை எப்படி விளக்கினால் என்ன -- அன்பு, பக்தி, ஈடுபாடு, ஞானம், ஆன்மிகம் ... -- எல்லாம் ஒண்ணுதான், என்னைப் பொருத்தமட்டில். எல்லாத்துக்கும் வலிமை உண்டு!