Thursday, October 21, 2010

வித்தியாசமான கீரை

கேல் (kale) என்ற கீரை மிகவும் சத்துள்ளது.  Organic kale பயன்படுத்துவது நல்லது.

1.  கேல் கீரையை நன்கு கழுவி, சுமாரான, மெலிந்த கீற்றுப் போல நறுக்கிக்கொள்ளவும்.


2. நறுக்கிய கீரையை ஒரு நல்ல பாத்திரத்தில் போட்டு, பாசிப்பருப்பு, தேங்காய்த்துருவல் போட்டு, வேகவைக்கவும். ஒரு 5~8 நிமிடம் போதும். ரொம்ப நேரம் வேகவைத்தால் கீரையின் பசுமை போய்விடும்; சத்தும் குறையும்.


3. கீரை வெந்தவுடன், பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும். கடுகு, மிளகாய் வத்தல், உளுத்தம்பருப்பு தாளிக்கவும். (பாசிப்பருப்பு இருப்பதால், உளுத்தம்பருப்பு கூடத் தேவையில்லை.)



4. காரட் துருவல், cranberry தொக்கு கலந்த சோறு, கீரை! உணவில் பலவகை இயற்கை வண்ணங்கள் இருப்பது கண்ணுக்கும் சத்துக்கும் ஏற்றது என்கிறார்களே!


5. சோய் தயிர்:

2 comments:

  1. ஆகா பார்க்கும்போதே நாவில் சுவை மொட்டுக்கள் துள்ளுகிறதே.......அருமை அம்மா. ஆனால் இந்த சோய் தயிர் தான் கொஞ்சம் ஒரு மாதிரி வாடை பிடிப்பதில்லை. பன்னீர் கூட டோஃபு பரவ்வயில்லை...நன்றி அம்மா.

    ReplyDelete
  2. சோய்தயிர்ச் சோற்றில் கடுகும் கறிவேப்பிலையும் தாளித்தால் ஒருவேளை பிடிக்கலாம்! :-)

    ReplyDelete