Friday, October 29, 2010

இஞ்சிச் சாறு...

1. நல்ல இஞ்சித் துண்டுகள். சிறு உரலில் போட்டு நைத்து எடுத்துக் கொள்ளவும்.



2. ஒரு நல்ல பாத்திரத்தில் நசித்த இஞ்சித் துண்டுகள், சிறிதளவு கரு மிளகு சேர்த்து, வேண்டுமளவு (ஒன்றுக்கு நாலு பங்கு) தண்ணீர் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.



3. நல்ல சர்க்கரை எடுத்துக்கொள்ளவும். அளவு 1~3 பெரிய தேக்கரண்டி. அவரவர் காரத்தைத் தாங்கும் சுவைக்கு ஏற்றபடி.


4. சர்க்கரையைக் கொதிவந்த இஞ்சிக் கலவையில் சேர்த்து, சர்க்கரை கரைந்து பச்சை வாசனை போகும் வரை (5~10 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

5. கொதிவந்த கலவையை அடுப்பிலிருந்து எடுத்து ஆறவைக்கவும்.

6. சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

6. ஆறியபின் அவரவர்க்கு விருப்பமான கோப்பையில் *சிறிய அளவில்* பரிமாறவும். ஒரே நேரத்தில் நிறையச் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். கவனம்!



7. சோயாப் பால் கலந்தால் "சுக்குக் காப்பி" போல இருக்கும்!

No comments:

Post a Comment