சாமை என்பது millet என்று அறியப்படுவது. இது மிகவும் சத்துள்ள தானியம். வேகவைக்கும்போதே இதன் சுண்ணாம்புச்சத்தின் நறுமணம் பரவும்.
இங்கே சாமையை எளிதில் பயன்படுத்திச் சுவைக்கும் முறை. பலருக்கும் அறிமுகமான, அரிசியைப் பயன்படுத்திச் செய்யும் "தேங்காய்ச் சாதம்" போல.
1. ஒரு சிறு கோப்பை அளவு சாமை எடுத்துக் கழுவி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
2. சாமையை ஒரு நல்ல பாத்திரத்தில் ஒன்றுக்கு 2 மடங்கு தண்ணீரில் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
3. சாமை மலர்ந்தாற்போல் வெந்தவுடன் பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே எடுத்துவைக்கவும்.
4. மலர்ந்து வெந்திருக்கும் சாமையைத் தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.
5. நல்ல வாணலியில் துருவிய தேங்காய் (ஒரு பங்கு வெந்த சாமைக்கு 1/8~1/4 பங்காக) போட்டு, பொன் நிறமாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
6. அதே வாணலியில் எண்ணைய் இல்லாமலே கடுகும் உளுத்தம் பருப்பும் தாளித்து எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு மிளகாய் வத்தலும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
5. பச்சைக் கறிவேப்பிலைத் தழை, சிறிதளவு பெருங்காயம் கலக்கவும்.
6. மேற்கண்ட பொருட்களை ஏற்கனவே வெந்து வைத்திருக்கிற சாமையில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
7. தேவையானால் வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.
உசிலம்பட்டியில் இதை 'கம்பு' என்போம். இரண்டாம் உலக யுத்தகாலம். அரிசி, நெல், ஜீனி கிடைக்காது. தினைப்பாயசமும், கம்பு உப்புமாவும், கேப்பைக் கூழும், சோளப்பொறியுமாக, உண்டு வாழ்ந்தோம். தெய்வம் ஏழையின் உணவில் சத்தும், செல்வந்தன் உணவில் கொழுப்புமாக, தருகிறான்.
ReplyDeleteஒம்.நல்ல பதிவு.
ReplyDeleteஒரு பழமொழி உண்டு.
’சாமை சமைத்தால் தெரியும்; சக்கிலிப் பெண் சமைந்தால் தெரியும்’
சமைதல்- பூப்படைதல்
’ஆடு பயிர்காட்டும் ஆவாரை நெல் காட்டும்’ என்பதைப் போன்றது.
ஓம்
வெ.சுப்பிரமணியன்
நம் பழைய உணவுப் பழக்கங்களைக் காலப்போக்கில் இழந்திருக்கிறோம்.
ReplyDelete