கீனுவா (quinoa) பாயசம்...
கீனுவா என்ற தானியம் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்:
( http://www.whfoods.com/genpage.php?dbid=142&tname=foodspice )
இந்தக் கீனுவா எங்கள் வீட்டில் உறைவாளி!
1. சிவப்புக் கீனுவா:
2. ஒரு பெரிய வடிகட்டியில் இந்த அழகிய மணிகளை இட்டு, தூசி துப்பட்டை போகக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
3. ஒரு பங்குக்கு 4 பங்கான தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (நேரம் ஆகும்.) இங்கே உள்ள படம் முளை கட்டின கீனுவா; வேக வைத்தது. (கீனுவாவை முளைகட்டவைப்பது எப்படி என்று பிறகு பார்க்கலாம்.)
4. ஒரு நல்ல பாத்திரத்தில் ("அடி கனமான எவர்ஸில்வெர்") ஒரு பங்கு வெந்த கீனுவாவுக்கு 2 பங்கு தண்ணீர் கலக்கி, ஒரு பங்கு கீனுவாவுக்கு 1.5 பங்கு சர்க்கரை (vegan type sugar) சேர்த்துக் கொதிக்கவிடவும்.
5. சர்க்கரைச் சத்து கீனுவாவுடன் கலந்துகொண்டிருக்கும்போது...
6. சில ஏலக்காய் விதைகளைப் பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
7. சிறிதளவு pine nuts அல்லது உடைத்த முந்திரிப்பருப்பைச் சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். எண்ணெய்/நெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளலாம்.
8. கீனுவா-சர்க்கரைக் கலப்பு நன்கு கொதி வந்தவுடன், அடுப்புத்தீயை நிறுத்தவும்.
9. மேற்கண்ட கலவையில் சிறிது ஸோயாப்பால் (soy milk) சேர்க்கவும்.
10. ஏலப்பொடி, பருப்பு, அதோடு கொஞ்சம் குங்குமப்பூ -- கலக்கவும்.
11. சுவையான பாயசம் ... படைக்கவும் சுவைக்கவும் தயார்:
No comments:
Post a Comment