Sunday, November 28, 2010

நன்றியுடன்...

நாங்கள் சுவைத்த உணவு... ... ...

1. நீல நிற உருளைக்கிழங்கு பொடித்தூவல்



2. வெங்காய சாம்பார்



3. "காலிஃப்ளவர்" - பட்டாணிக் குருமா



4. Cranberry வற்றல் குழம்பு! சுண்டைக்காய் வத்தல் இல்லாத குறை.




5. பருப்பு உசிலி


6. மற்றும் பிற ... ... ... .

இயற்கைக்கு நன்றி!

Monday, November 22, 2010

கூட்டுக்குடும்பம்...

1. நெறஞ்ச குடும்பம்...




2. வழிவிடு...



3. அடிச்சாலும் புடிச்சாலும் நாங்க ஒரே குடும்பம்...

Sunday, November 21, 2010

குப்பை...

... உதிர்ந்தாலும் முதிர்ந்தாலும் இனியவை...

1. ஒரு சின்ன மரம் தந்த மாணிக்கக் குப்பை!



2. மேலதற்குப் பக்க மரம் தந்த பொற்குப்பை.



3. மேலதற்கு அயல்மரம் தந்த செங்குப்பை.



4. போற்றாமல் விட்டாலும் இனிமை தரும் சிறுகுப்பை. ஸ்டீவியா (stevia). ஒரு சிறு இலை தரும் இனிப்பு ஒரு தேக்கரண்டியளவு கரும்புச் சர்க்கரையைவிடக் கூடுதல்! இதன் விவரம் தெரிய: http://en.wikipedia.org/wiki/Stevia



இயற்கைதரும் பாடம் எவ்வளவோ! அகக்கண்ணிருந்தால் போதும்; அந்தப் பாடத்தின் பயனைப் பெறலாம்.

Friday, November 19, 2010

chestnut...

ahhh... what a wonderful gift from Nature!

பலவகையில் இந்தக் காயை/பருப்பைப் பயன்படுத்தலாம்.

1. செஸ்ட்நட் கொட்டைகளைக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.




2. கொட்டையின் தோலில் சிறு கீறல் போடவும்.




3a. சில கொட்டைகளை வறுக்கலாம். வறுத்து எடுத்த பின் தோலை உரிக்கவும்.
(You can also bake it in an oven.)


 

3b. சில கொட்டைகளை வேகவைக்கலாம். வெந்த கொட்டைகளைத் தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்.


4. வறுத்த/வேக வைத்த chestnut கொட்டைகள்/பருப்பு மிகவும் இனிமையானவை. எப்படி வேண்டுமானாலும் சுவைக்கலாம்!

கிடைத்தால் சுவைத்து மகிழ்க!

Wednesday, November 17, 2010

winter wonder... well... in a desert ...

1. representing the past...



2. and.... bearing the future...


Smile with us! Be optimistic! :-)

காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே...

1. மோனத்திருப்போம் ...








2. அறிதுயில் மீளோம்...



3. பொன் தோகை விரிப்போம்...







4. சிலிர்ப்போம்...






  
நீங்கள்...??

Tuesday, November 16, 2010

புளிக்குழம்பு... + ... பருப்பு உசிலி

மறுபடியுமா? ஆம். இவை வேறுபட்ட மசாலாவுடன் + வேறுபட்ட பருப்பிலிருந்து.

புளிக்குழம்பு
----------------
1. ஒரு தக்காளி (அளவு நாட்டுக்கு நாடு வேறுபடும்), 1-3 பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கு ஏற்றபடி), 1/2 தேக்கரண்டி சோம்பு (fennel seeds), சிறிதளவு வெங்காயம் (அவரவர் சுவைக்கு ஏற்றபடி) -- இவற்றை எடுத்துக்கொள்ளவும்.

2. தக்காளியையும் மிளகாயையும் கழுவி நீள வாக்கில் வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.

3. வெங்காயத்தையும் நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். (சிறிய, நாட்டு வெங்காயம் இருந்தால் நல்ல சுவை கூடும்!)

4. ஒரு நல்ல பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடு வந்தவுடன் முதலில் சோம்பைப் போட்டு அது நிறம் மாறத் தொடங்கும்வரை வதக்கவும்.

5. மேற்கண்ட கலவையில் மிளகாய்க் கீற்று, வெங்காயம் இவற்றைப் போட்டு வதக்கவும். (3~5 மணித்துளிகள் வதக்கினால் போதும். அவரவர் அடுப்புக்கு ஏற்ற சூட்டினால் இந்தக் கணக்கு மாறலாம்.)

6. மேற்கண்ட கலவையில் தக்காளிக் கீற்றுக்களைப் போட்டு வதக்கவும். (5~10 மணித்துளிகள் போதும்.)

7. வெந்து வதங்கிய கலவையைத் தனியே எடுத்துவைக்கவும்.


8. ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி எடுத்துத் தூய்மை செய்து சாறு எடுத்துக்கொள்ளவும்.

9. கழுவித் தூய்மை செய்த வெண்டைக்காய் அல்லது உருளைக்கிழங்குக் கீற்றுகள் எடுத்துக்கொள்ளவும். இந்தக் காயைச் சிறிது எண்ணெயில் 3~5 மணித்துளிகள் வதக்கவும்.

10. வதங்கிய காயில் சிறிது சாம்பார்ப்பொடி (1~2 தேக்கரண்டி) கலந்து இன்னும் ஒரு மணித்துளி வதக்கவும். (சாம்பார்ப் பொடி இல்லையென்றால் ... சிறிது சீரகப்பொடியும், கொத்துமல்லிப்பொடியும், மிளகு பொடியும் சேர்த்தாலும் அது ஒருவகை மணமும் சுவையும் தரும்.)

11. வதங்கிய காயில் புளிச்சாற்றைக் கலந்து சிறிது நேரம் (~5 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

12. தக்காளிக் கலவையைப் புளிக்கலவையில் சேர்த்துச் சிறிது நேரம் (~10 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

13. மேற்கண்ட குழம்பு கொதிவந்தபின் அடுப்பிலிருந்து எடுத்துவைக்கவும்.

14. பச்சைக்கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.  தேவையானால் சிறிதளவு உப்பும் சேர்க்கலாம்!


இந்தக் குழம்பு நாட்பட நாட்பட நல்ல நறுமணமும் சுவையும் மிகுந்து தெரியும். ஆனால், கெட்டுப்போகாதபடி வைத்திருக்கவேண்டும்!

+++++++++++++++++++++++++++

வித்தியாசமான பருப்பு உசிலி. பீன்ஸ் (beans) வகைகளிலிருந்து.




குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தவும். எப்படிச் சமைத்தாலும் மகிழ்ச்சியாக, அளவோடு சுவைத்து உண்ணவும்!

Sunday, November 14, 2010

மாதுளை முத்து -- பச்சடியில்...

இது நல்ல மாதுளங்கனிகள் கிடைக்கும் காலம். மாதுளை முத்துக்களை அப்படியே சுவைப்பது தனிச்சுவை. இங்கே வேறொரு வகையில் சுவக்கும் முறை.

1. நல்ல பழுத்த மாதுளங்கனியின் முத்துக்களை எடுத்துக்கொள்ளவும்.





2. (சோயாத்) தயிர் சிறிதளவு எடுத்துக் கொண்டு, மாதுளை முத்துக்களை அந்தத் தயிரில் கலக்கவும்.


விரும்பினால், தேவையானால் -- சிறிது உப்பு, பொடித்த வேர்க்கடலை, பச்சைக் கொத்துமல்லித்தழை சேர்க்கலாம்.

கண்ணுக்கு இனிய, சத்துள்ள இந்தப் பச்சடியைச் சுவைத்து மகிழவும்!

Saturday, November 13, 2010

உப்புமா -- கோதுமைக் குருணையில்...

உப்புமா தமிழகத்துக்குப் புதிதில்லை. இந்த உப்புமா bulgur wheat என்ற குருணையில் செய்தது. அவ்வளவே.

1. தேவையான அளவு கோதுமைக் குருணை எடுத்துக்கொள்ளவும்.



2. கோதுமைக் குருணையை ஒரு நல்ல வடிகட்டியின்மூலம் கழுவிச் சுத்தம் செய்து, ஒரு நல்ல பாத்திரத்தில் போட்டு, ஒன்றுக்கு 1.25 ~ 1.5 மடங்கு தண்ணீர் கலந்து, இளஞ்சூட்டில் வேகவைக்கவும். குருணை வேக ஒரு 10~15 மணித்துளி ஆகலாம். அடிப்பிடிக்காமல், ஒரு முள்ளுக்கரண்டியால் (fork) அவ்வப்போது கிளறிவிடவும்.

3. கோதுமைக் குருணை வெந்துகொண்டிருக்கும்போது (அல்லது அதற்கு முன்னோ பின்னோ) விருப்பமான மசாலா/கறி தயார் செய்யவும்.

4. வெந்த குருணையுடன், தயாரித்த மசாலாவைக் கலக்கி, 5~10 மணித்துளிகள் இளஞ்சூட்டில் வைத்து எடுக்கவும். பச்சைக் கறிவேப்பிலையும், சிறிதளவு வேர்க்கடலையும் சேர்க்கலாம்.



அளவோடு சுவைத்து மகிழ்வோடு உண்ணவும்.

Friday, November 12, 2010

வித்தியாசமான மோர்ச் சாறும் கிழங்கும்...

சோய் மோர்ச்சாறு:
----------------------


சோய்ப் பாலில் ஒரு சிறு எலுமிச்சையின் சாற்றைக் கலந்து பாலை உறைய வைப்பதுபோல் உறையவைக்கவும். சூழ்நிலையின் வெப்பத்திற்கேற்றபடிச் சோய்ப்பால் உறைந்து தயிராகும். (குளிர்நாடுகளில் இந்தத் தயிர் புளிக்க இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். புளிக்காமலேகூடப் போகலாம்!)

சோய்த்தயிரை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடியும் நீரை நல்ல பாத்திரத்தில் ஏந்திக் கொள்ளவும்.

1. சோய்த் தயிரை வடிகட்டுதல்.



2. மேலே வடிகட்டிக்குக் கீழே சேர்ந்த மோர். (வடிகட்டியில் சேர்ந்த சோய்த் திரளைப் பாலடைக்கட்டி [cheese] போலப் பயன்படுத்தலாம்.)



3. ஒரு நல்ல பாத்திரத்தில் கடுகு, சிறிது வெந்தயம், 3~4 மிளகாய் வத்தல் இவற்றைத் தாளித்து, சிறிது (1/2 தேக்கரண்டியளவு) மஞ்சள் பொடி ("மஞ்சள் தூள்") கலக்கவும்.

4. சோய் மோரை மேற்கண்ட தாளிப்புக் கலவையுடன் சேர்த்து இளஞ்சூட்டில் கொதிக்கவைக்கவும். சூடு கூடினால் மோர் திரிந்துபோகும். அவ்வாறு திரிந்துபோகாமல் கரண்டியால் அடிக்கடிக் கலக்கிவிடவும்.

5. 10~15 மணித்துளி கொதித்தபின் கொதிவந்த மோரை அடுப்பிலிருந்து இறக்கி, பச்சைக் கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். சிறிதளவு உப்புச் சேர்த்துக்கொள்ளலாம்.



சுவையான சோய் மோர்ச் சாறு தயார்.

++++++++++++++++++++++++++++++++++

1. "போலிச் சிறுகிழங்கு" (நான் வைத்த பெயர்). ஜெரூசலம் ஆர்ட்டிச்சோக் (Jerusalem artichoke) அல்லது சன் ச்சோக் (sunchoke) என்று சொல்கிறார்கள்.



2. நன்றாகக் கழுவி, தோல் சீவி, வில்லைகளாக (அல்லது சிறு துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும்.




3. பச்சையாகச் செய்யும் salad-இல் கலக்கலாம்.





4. மற்றக் கிழங்குகளைச் சமைப்பதுபோல் சமைக்கவும் செய்யலாம்.







எப்படிச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் சுவைத்து உண்ணவும்.

Wednesday, November 10, 2010

எதிர்பாரா விருந்தாளி -- அழகியவை

நான் விதைக்கவில்லை; வளர்ப்பதற்கு உழைக்கவும் இல்லை! ஆனாலும் இயற்கை தந்த பரிசுகள் இவை:

1. இதோ பார், வந்திருக்கிறேன்!



2. நானும் ...

இயற்கையழகு தரும் மகிழ்ச்சி விவரிக்க இயலாதது.

Tuesday, November 9, 2010

வித்தியாசமான பச்சடி...

1. கரும் plum ஒன்று எடுத்துக் கழுவி வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.





2. நல்ல வெள்ளரி ஒன்று எடுத்துக் கழுவி, துருவி எடுத்துக்கொள்ளவும். Organic வெள்ளரியாக இருந்தால் தோல் சீவ வேண்டியதில்லை.

3. சீவிய வெள்ளரியை ஒரு வடிகட்டியில் சிறிது நேரம் (~10 மணித்துளிகள்) போட்டுவைக்கவும். (வடியும் நீர்ச்சத்தை வீணாக்கவேண்டாம் என்று நினைத்தால் சேமித்துவைத்துக் காய்கறிச்சாறு (soup) செய்யப் பயன்படுத்தலாம். அல்லது முகம் கழுவப் பயன்படுத்தலாம்!)



4. வெள்ளரிச் சீவலையும், பிளம் பழ நறுக்குகளையும் சோயாத் தயிரில் கலந்து பச்சடி செய்யலாம். பச்சைக் கொத்துமல்லித்தழை சேர்த்தால் மணம் கூடுதல்.


வண்ணமும் சுவையும் சத்தும் நிறைந்த, எளிதில் செரிக்கும் உணவு. செய்து சுவைத்து உண்டு மகிழ்ந்து பயன் பெறுக!

நூல்கோல் "வறுவல்" ???

உப்புக்கு/ஒப்புக்குச் சப்பாணி... நூல்கோல் "வறுவல்" ... இல்லை "பஜ்ஜி" ... இல்லை ...

எதுவானால் என்ன? இருப்பதைப் பயன்படுத்தலாமே!

1. நூல்கோலைக் கழுவி, தோல் நீக்கி, வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். நீர்ச்சத்து வடிய ஒரு பருத்தித் துணியிலோ அல்லது நல்ல தாளிலோ அந்தத் துண்டுகளைப் பரப்பிவைக்கவும்.




2. சில நூல்கோல் துண்டுகளை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.



3. மேலே குறிப்பிட்ட நூல்கோல் துண்டுகள் ஈரம் போக உலரட்டும்.

4. அவரவர் சுவைக்குத் தேவையான அளவு கடலை மாவு, அரிசி மாவு, மிளகு பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயம் இவற்றைத் தண்ணீரில் குழைத்துக்கொள்ளவும்.





5. நூல்கோல் வில்லைகளை நல்ல எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாவுக்கலவையில் தோய்க்கவேண்டாம்.




6. நூல்கோல் துண்டுகளை மாவுக்கலவையில் தோய்த்துப் பொரித்து எடுக்கவும்.



இது "எங்கள் தமிழக tempura" என்று சொல்லி அளவாக மகிழ்ச்சியோடு சுவைத்து உண்ணவும்! :-)