Tuesday, November 9, 2010

நூல்கோல் "வறுவல்" ???

உப்புக்கு/ஒப்புக்குச் சப்பாணி... நூல்கோல் "வறுவல்" ... இல்லை "பஜ்ஜி" ... இல்லை ...

எதுவானால் என்ன? இருப்பதைப் பயன்படுத்தலாமே!

1. நூல்கோலைக் கழுவி, தோல் நீக்கி, வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். நீர்ச்சத்து வடிய ஒரு பருத்தித் துணியிலோ அல்லது நல்ல தாளிலோ அந்தத் துண்டுகளைப் பரப்பிவைக்கவும்.




2. சில நூல்கோல் துண்டுகளை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.



3. மேலே குறிப்பிட்ட நூல்கோல் துண்டுகள் ஈரம் போக உலரட்டும்.

4. அவரவர் சுவைக்குத் தேவையான அளவு கடலை மாவு, அரிசி மாவு, மிளகு பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயம் இவற்றைத் தண்ணீரில் குழைத்துக்கொள்ளவும்.





5. நூல்கோல் வில்லைகளை நல்ல எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாவுக்கலவையில் தோய்க்கவேண்டாம்.




6. நூல்கோல் துண்டுகளை மாவுக்கலவையில் தோய்த்துப் பொரித்து எடுக்கவும்.



இது "எங்கள் தமிழக tempura" என்று சொல்லி அளவாக மகிழ்ச்சியோடு சுவைத்து உண்ணவும்! :-)

3 comments:

  1. 'மாவுக்கலவையில் தோய்க்கவேண்டாம்'. ட்ரிக் இங்கே 'ஃப்ரென்ச் ஃப்ரை தோத்தது போங்க. அன்றே, நூல்கோல் வறுவல் இயலாது என்றக்க் கூற்றை எதிர்க்க நினைத்தேன். மார்க்கம் தெரியவில்லை. நன்றி.

    ReplyDelete
  2. Franchise ஆரம்பித்துவிடலாமா?! :-)

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் புடலை, பீர்க்கை போன்றவற்றில் என் அம்மா பஜ்ஜி செய்வா, நூல்கோலிலும் அடுத்த முறை பண்ணிப் பார்த்துடலாம்.

    ReplyDelete