Sunday, November 21, 2010

குப்பை...

... உதிர்ந்தாலும் முதிர்ந்தாலும் இனியவை...

1. ஒரு சின்ன மரம் தந்த மாணிக்கக் குப்பை!



2. மேலதற்குப் பக்க மரம் தந்த பொற்குப்பை.



3. மேலதற்கு அயல்மரம் தந்த செங்குப்பை.



4. போற்றாமல் விட்டாலும் இனிமை தரும் சிறுகுப்பை. ஸ்டீவியா (stevia). ஒரு சிறு இலை தரும் இனிப்பு ஒரு தேக்கரண்டியளவு கரும்புச் சர்க்கரையைவிடக் கூடுதல்! இதன் விவரம் தெரிய: http://en.wikipedia.org/wiki/Stevia



இயற்கைதரும் பாடம் எவ்வளவோ! அகக்கண்ணிருந்தால் போதும்; அந்தப் பாடத்தின் பயனைப் பெறலாம்.

5 comments:

  1. குவிவது குப்பை என்றால் அறிவும் குப்பை :)
    குவிக்க வேண்டியது அறிவு
    குப்பையிலும் அறிவும் அழகும் இருப்பது
    உட்குவிப்புடையாருக்கு உண்டன்றோ!

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete
  2. அந்த உட்"குப்பை"தான் செல்வா நம் செல்வம்! :-)

    ReplyDelete
  3. ரோசா குப்பையானாலும், அழகுதான், குல்கந்து செய்யலாம் பன்னீர் ரோசாவாக இருந்தால்........

    ReplyDelete
  4. 'குப்பையில் மாணிக்கம்' கண்டெடுப்பதும் உண்டு. இந்தியாவில், சிலசமயம் குழவிகளும் கிடைக்கும். எதுவானாலும், அது ஒரு நாள் குப்பை. படங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், புத்தகங்களை தொலைப்பதும், வேண்டா குப்பைகளை பராமரிப்பதும், ஒரு மரபு, இங்கே.

    ReplyDelete
  5. நித்திலம்-சிப்பிக்கு முத்து, இவை ரோசா இல்லை! வீட்டில் இருக்கும் இரண்டு சிறிய மரங்களும் (மெர்ட்டில்? பெயர் சரியாகத் தெரியவில்லை) வெளியே உள்ள ஒரு பெரிய செர்ரி மரமும் உதிர்த்தவை.

    இ சார், புத்தகங்களை நான் தொல்லைக்கவில்லை! நாடும், ஊர்களும், வீடுகளும் மாறியதால் காலத்தின் கோலம்! :-)

    ReplyDelete