1. கரும் plum ஒன்று எடுத்துக் கழுவி வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. நல்ல வெள்ளரி ஒன்று எடுத்துக் கழுவி, துருவி எடுத்துக்கொள்ளவும். Organic வெள்ளரியாக இருந்தால் தோல் சீவ வேண்டியதில்லை.
3. சீவிய வெள்ளரியை ஒரு வடிகட்டியில் சிறிது நேரம் (~10 மணித்துளிகள்) போட்டுவைக்கவும். (வடியும் நீர்ச்சத்தை வீணாக்கவேண்டாம் என்று நினைத்தால் சேமித்துவைத்துக் காய்கறிச்சாறு (soup) செய்யப் பயன்படுத்தலாம். அல்லது முகம் கழுவப் பயன்படுத்தலாம்!)
4. வெள்ளரிச் சீவலையும், பிளம் பழ நறுக்குகளையும் சோயாத் தயிரில் கலந்து பச்சடி செய்யலாம். பச்சைக் கொத்துமல்லித்தழை சேர்த்தால் மணம் கூடுதல்.
வண்ணமும் சுவையும் சத்தும் நிறைந்த, எளிதில் செரிக்கும் உணவு. செய்து சுவைத்து உண்டு மகிழ்ந்து பயன் பெறுக!
super pachadi.
ReplyDeleteto continue
ReplyDeleteலண்டன் போனவுடன் முதல் வேலை, மாட்டுப்பெண்ணுக்கு சொல்லிக்கொடுத்து, நல்ல பேர் எடுப்பது.
ReplyDeleteசெய்து காட்டினாலோ ... ... ... செய்துவைத்தாலோ அந்தக் குழந்தையின் மனம் நெகிழ்ந்து மகிழும்! இல்லையோ? ;-)
ReplyDelete