உப்புமா தமிழகத்துக்குப் புதிதில்லை. இந்த உப்புமா bulgur wheat என்ற குருணையில் செய்தது. அவ்வளவே.
1. தேவையான அளவு கோதுமைக் குருணை எடுத்துக்கொள்ளவும்.
2. கோதுமைக் குருணையை ஒரு நல்ல வடிகட்டியின்மூலம் கழுவிச் சுத்தம் செய்து, ஒரு நல்ல பாத்திரத்தில் போட்டு, ஒன்றுக்கு 1.25 ~ 1.5 மடங்கு தண்ணீர் கலந்து, இளஞ்சூட்டில் வேகவைக்கவும். குருணை வேக ஒரு 10~15 மணித்துளி ஆகலாம். அடிப்பிடிக்காமல், ஒரு முள்ளுக்கரண்டியால் (fork) அவ்வப்போது கிளறிவிடவும்.
3. கோதுமைக் குருணை வெந்துகொண்டிருக்கும்போது (அல்லது அதற்கு முன்னோ பின்னோ) விருப்பமான மசாலா/கறி தயார் செய்யவும்.
4. வெந்த குருணையுடன், தயாரித்த மசாலாவைக் கலக்கி, 5~10 மணித்துளிகள் இளஞ்சூட்டில் வைத்து எடுக்கவும். பச்சைக் கறிவேப்பிலையும், சிறிதளவு வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
அளவோடு சுவைத்து மகிழ்வோடு உண்ணவும்.
அளவோடு சுவைத்து மகிழ்வோடு உண்ணவும் .....இதுதான் அம்மா சற்று கடினம் ?
ReplyDelete