Tuesday, December 7, 2010

வித்தியாசமான பழம் ...

இதன் பெயர் ஆங்கிலத்தில் persimmon. தமிழில் பெர்சிம்மன் என்று சொல்லலாம்.

கூடுதல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Persimmon


இதில் இரண்டு வகை. ஒரு வகை fuyu. இது தட்டையாகவும் உருண்டும் இருக்கும்.
ஆப்பில் (apple) போல நறுக் நறுக் என்று இருக்கும்.





இன்னொரு வகை  hachiya. இது கூம்பு வடிவில் இருக்கும்.  கொழ கொழ என்று குழைந்து பழுக்காவிட்டால் ... சாப்பிட்டுச் சுவைக்க முடியாதது. கச்சை வாழைக்காயைச் சாப்பிட்டதுபோல் இருக்கும். இது பழுக்கும் வரை பொறுமை தேவை!





சரி. நான் என்ன செய்தேன்? அப்படியே சாப்பிட்டேன்! அதோடு ... ... ...

1. பெர்சிம்மன் (persimmon) பழங்களைக் கழுவி எடுத்துக்கொள்ளவும். விருப்பமான அளவு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.




2. (சோய் Soy) தயிர்ப்ப்பச்சடி செய்யவும்




Taste the contrast and enjoy the benefit! பழம் தரும் நல்ல மருந்து, இனிப்பின் எல்லை, கடுகின் காரம், மிளகாயின் மிடுக்கு, கண்ணுக்கினியது, ... ... ... ! வேறென்ன வேண்டும்!

3 comments:

  1. களாக்காய் மாதிரி ஊறுக்காயும் போடலாமோ?? பழுக்காததை வைச்சுத் தான்! :)))))

    ReplyDelete
  2. Fuyu வகையை ஊறுகாய் செய்யலாம். ... காத்திருக்க எனக்குத்தான் பொறுமை இல்லை! பழத்தைப் பார்த்த உடனே சுவைக்க ஆசை! :-)

    அந்த hachiya வகை பழுக்காவிட்டால் அரிப்பு ரொம்ப. அதை மாற்ற எண்ணெய், உப்பு, காரம் இப்படிச் சீராடணும். அது பழத்தின் சத்தைக் குறைக்குமோ என்று தயக்கம். செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி, கீதா!

    ReplyDelete
  3. காயாக உள்ள போது, நாவல் பழம்போல நாக்கில் ஒட்டும். அதை பழுக்க வைக்க சுலபமான வழி, சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன் freezer (பிரிட்ஜில் ஐஸ் கட்டும் இடம்)இல் வைத்து எடுத்தால் போதுமானது.

    ReplyDelete