Sunday, December 12, 2010

ரசம் -- எளிமையான ரசம்

புளி இல்லாத ரசம்...

1. இரண்டு கோப்பை அளவு துவரம் பருப்பை எடுத்து, கழுவி, குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (நல்ல பருப்பாக இருந்தால் குழையும்போது ஒன்றுக்கு மூன்று மடங்காகப் பெருகும்.)

(மாதிரிக்கு ... 1/3 கோப்பை அளவுள்ளது இங்கே. இதன் கொள்ளளவு 80 milliliter என்று தெரிகிறது.)



2. குழைந்த பருப்பில் 2/3 பங்கு எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நீர்க்கக் கரைத்து எடுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.

3. ஒரு தக்காளியை இரண்டு பகுதிகளாக நறுக்கிக் கொள்ளவும்.




4. ஒரு பகுதித் தக்காளியைச் சுத்தமான கைவிரல்களால் பிசைந்து எடுத்துக்கொள்ளவும். இன்னொரு பகுதியை 4~6 சிறு துண்டுகளாக நறுக்கித் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

5. ஒரு நல்ல பாத்திரத்தில் ... பிசைந்த தக்காளி, 2~3 பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்றபடி), 2 teaspoon ரசப் பொடி, 3 நடுத்தர அளவு கோப்பைத் தண்ணீர் இவற்றைக் கலந்து கொதிக்கவைக்கவும்.



6. மேலே காணும்படி ரசக் கலவை நுரைத்துக் கொதிவரும்போது, அடுப்புச் சூட்டைத் தணிக்கவும்.

7. நீர்க்கக் குழைத்த பருப்பை ரசக்கலவையில் சேர்க்கவும். (ரசம் நீர்க்க இருக்கவேண்டும் என்று விரும்பினால், ஒரு சிறிய கோப்பை அளவு தண்ணீரை இப்போது சேர்க்கலாம்.)

8. சிறிதாக நறுக்கி வைத்த தக்காளித் துண்டுகளையும் சேர்க்கவும்.

9. சிறிய அளவு (1/2 teaspoon அல்லது தேவைக்கேற்றபடி) மிளகும், 1/4 teaspoon சீரகமும் பொடி செய்து ரசக் கலவையில் சேர்த்து, ரசக் கலவையை மெல்ல ஒரு தடவை கிளறிவிடவும்.

10. அடுப்புச் சூட்டைச் சிறிய அளவில் கூட்டி, ரசக்கலவையைக் கொதிக்கவிடவும்.

11. ரசக் கலவை கொதித்து நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிடவும்.

12. சிறிதளவு எலுமிச்சைச்சாறு (2 table spoon அல்லது அவரவர் தேவைக்கு ஏற்றபடி) கலக்கவும்.

13. கறிவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.

14. கடுகு தாளிக்கவும்.



சுவையான ... "மணமும் குணமும் நிறைந்த" ரசம் தயார்! நல்ல பசியே தேவை! :-)

1 comment:

  1. பொரிச்ச ரசம்னு சொல்வாங்களே அம்மா, எங்க வீட்டிலே வாரம் இரு முறை புளியில்லாச் சமையல் தான். பொரிச்ச குழம்பு, பொரிச்ச ரசம், அல்லது எலுமிச்சம்பழம் சேர்த்த புளியில்லா ரசம்னு. நன்றி அம்மா.

    ReplyDelete