Tuesday, December 14, 2010

இனிப்புப் பருப்பு...

வீட்டில் இருந்த சில பருப்புக்கள் (walnut + pecan) வைத்துச் செய்தது...

1. வால்நட் (walnut), பீக்கான் (pecan) பருப்புக்களைத் தேவையான அளவு எடுத்து, புடைத்து, தேவையானால் கழுவியும் எடுத்துக்கொள்ளவும்.

2. பருப்புக்களை ஒரு நல்ல சட்டியில் எண்ணெய் இல்லாமல் சிறிதளவு பொன் நிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வால்நட் பருப்பு, வறுத்தது:



பீக்கான் பருப்பு, வறுத்தது:



3. ஒரு நல்ல பாத்திரத்தில் 3 கோப்பை பனங்கல்கண்டை (== கருப்பட்டி or brown sugar) 5 கோப்பைத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்துப் பாகு செய்துகொள்ளவும். (வெல்லம் நன்றகக் கரைந்து தண்ணீர் வற்றினால் போதும். பாகு கம்பிப் பதம் ஆகவேண்டும் என்ற தேவை இல்லை.)

4. வெல்லப் பாகில் 3~5 ரோஸ்மேரி (rosemary) தழைகளைப் போட்டு ஊறவிடவும்.

Rosemary:



5. விரும்பினால்... வெல்லப் பாகில் சிறிது இஞ்சித் தூள் (ginger powder), மிளகு பொடி (black pepper), லவங்கப் பட்டைத் தூள் (cinnamon powder), கிராம்பு (cloves) இவற்றைச் சிறிய அளவில் கலக்கவும்.

6. பருப்புகளை வெல்லப்பாகில் போட்டுக் கலக்கவும்.



7. Conventional oven அல்லது microwave oven-இல், குறைந்த அளவு சூட்டில், 15-20 மணித்துளிகள் சூடாக்கி எடுத்துக்கொள்ளவும்.

8. ரோஸ்மேரித் தண்டுகளை எடுத்துவிட்டு, இனிப்புப் பருப்புக் கலவையைச் சிறிய தாள் கிண்ணங்களில் பரிமாறவும்.

3 comments:

  1. இந்த பாழப்போன டயபடீஸ் மட்டும் தொந்திரவு செய்யவில்லையென்றால், ஒரு கை பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
  2. அம்மா, பீகன் பருப்புகளை எப்படிச் செய்யறதுனு யோசிச்சிட்டிருந்தேன். நன்றி. இன்னம்பூரார் சொல்றாப்போல் என் கணவருக்குச் சர்க்கரை இருப்பதால் அவர் சாப்பிட முடியாது. எனினும் செய்து விநியோகித்துவிடுகிறேன். நன்றி அம்மா, அருமையான குறிப்புக்கு.

    ReplyDelete
  3. பருப்புப் பொடி செய்வது போல ... இனிப்பு இல்லாமல் ... மிளகு, மிளகாய் வத்தல், பெருங்காயம், கறிவேப்பிலை ... போட்டுச் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete