Thursday, December 16, 2010

கூழ் -- வித்தியாசமான கூழ் ...

இதைச் சோள மாவிலும் (white corn flour) செய்யலாம்.


இங்கே செய்தது sorghum மாவில். 

1. ஒரு சிறு கோப்பை அளவு sorghum மாவை எடுத்துக்கொள்ளவும்.

நான் பயன்படுத்திய sorghum மாவு:



2. ஒரு மடங்கிற்கு மூன்று பங்கு தண்ணீரில் sorghum மாவைக் கலந்து கொதிக்கவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.


3. தேவையான காய்க் கலவை செய்துகொள்ளவும்.

4. காய்க்கலவையில் மேற்படிச் செய்த கூழைக் கலக்கிச் சிறிது நேரம் வதக்கவும்.
(எவ்வளவு நேரம் வதக்குவது என்பது ... அவரவர் தேவைக்கு ஏற்றபடி ... எண்ணெய் கலந்தோ கலக்காமலோ ... செய்யலாம்.)


5. மேலே சொன்ன கலவை வெந்து, தேவையான அளவு வதங்கியபின் ... (சோய்த்) தயிர்க் கட்டிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வாய்க்கும் வயிற்றுக்கும் நல்ல உணவு! நெய்யும் பாலும் சேர்க்காத ... மார்கழிக்கு ஏற்ற உணவு!

3 comments:

  1. அம்மா.....எப்படித்தான் இப்படி வித்தியாசமாக கண்டுபிடிக்கிறீர்களோ? உண்மை வாய்க்கும் ருசி, வயிற்றுக்கும் சுகம்.....அருமை.

    ReplyDelete
  2. என் மாதிரி ஆசாமிகளுக்கு பண்றதும் சுலபம். ஜீரணம் பண்றதும் சுலபம்.

    ReplyDelete
  3. அருமையான உணவு. உணவுக்கட்டுப்பாட்டுக்கும் சிறந்தது. நன்றி. இது கார்ன் மீல் னு சொல்லுவாங்களே, அந்த மாவு தானே?? இங்கே கார்ன் மீல்னாத் தான் சமைக்கும் சோளமாவு கிடைக்கும். இல்லைனா, கார்ன்ஃப்ளவர்னு இருக்கே வாசனைகள் சேர்த்துப் பக்குவப் படுத்தியது அது கொடுப்பாங்க.

    ReplyDelete