Tuesday, February 15, 2011

வற்றல் குழம்பு ... - 2

இந்த வகை வத்தக் குழம்பு ("வற்றல் குழம்பு") மிகவும் எளிமையாகச் செய்யக்கூடியது.

தேவையானவை
---------------------
நல்ல புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
வத்தல் - 1 ~ 2 மேசைக் கரண்டி
துவரம் பருப்பு - 3/4 ~ 1 மேசைக் கரண்டி
சாம்பார்ப் பொடி - 3/4 ~ 1 மேசைக் கரண்டி
உப்பு - சிறிது
நல்லெண்ணெய் - 1 ~ 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
பச்சைக் கறிவேப்பிலைத் தழைக் குச்சி - 2
கடுகு - தாளிக்க
தண்ணீர் - 3 கோப்பைப் புளிக் கரைசல் உண்டாக்கத் தேவையான அளவு

செய்முறை
---------------
1. புளியைக் கழுவி, 3 கோப்பைக் கரைசல் வரும் அளவுக்குக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நான் பயன்படுத்திய புளி:


தோடு நீக்கிய பிறகு ஊறும் புளி:


புளிக் கரைசல்:



2. வத்தலைக் கழுவி, ஈரப் பசை இல்லாமல் உலரவைத்து எடுத்து, சிறிது நல்லெண்ணெயில் வறுத்துத் தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.



3. ஒரு நல்ல பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவரம் பருப்பைப் பொன் நிறத்துக்குத் தாளித்துக்கொள்ளவும்.

4. அடுப்புச் சூட்டைத் தணித்துவிட்டு, தாளித்த பருப்பில் சாம்பார்ப் பொடியைச் சேர்த்துப் பருப்பின் இளம் சூட்டிலேயே அந்தப் பொடியை 1/2 மணித்துளி வைத்திருக்கவும்.

5. புளிக் கரைசலைப் பாத்திரத்தில் ஊற்றவும்.

6. உப்பு, ெருங்காயம் சேர்க்கவும்.

7. புளிக் கரைசலை மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். கரைசல் பொங்கி நுரைத்து வந்து பாதி அளவு வற்றும் வரை கொதிக்கவைக்கவும்.

8. வத்தலைச் சேர்த்துச் சிறிது நேரம் (5 மணித்துளிகள்) கொதிக்கவிடவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.



9. கடுகு தாளிக்கவும்.



குறிப்பு:
----------
+ இங்கே நான் பயன்படுத்திய வகைப் புளியின் அருமையான சுவையே தனி! வெல்லம் போன்ற பிற கலவைகள் இல்லாமல் வரும் புளி இது!

+ சாம்பார்ப் பொடி இல்லாவிட்டால் புளிக் குழம்புப் பொடி என்று கிடைக்கும் பொடியைப் பயன்படுத்தலாம்.

+ கைபடாமல் நல்ல முறையில் பாதுகாத்துவைத்தால் இந்தக் குழம்பு பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

1 comment:

  1. கல்சட்டியா அது?? அங்கே கிடைக்குதா?? இந்த முறையில் செய்யறது உண்டு. அதோடு வெந்தயக்குழம்பு என்றால் மி.வத்தல், து.பருப்பு, வெந்தயம் வெறும் சட்டியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு இறக்கும்போது போட்டுக் கலப்பதும் உண்டு.

    ReplyDelete