Monday, May 9, 2011

செட்டிநாடு -- கோவிலூர்

காரைகுடிக்குப் பக்கத்தில் இருக்கிறது கோவிலூர்.


1. நுழைவாயில் ... . கண்ணைப் பறிக்கும் வானத்தின் நீலம்!



2. கோயிலைச் சேர்ந்த குளம் ... . அமைதியின் வடிவம் ...



3. குளத்தின் மைய மண்டபம் ... . மண்டபத்துக்கு வலது புறம் (படம் பார்க்கும் பார்வையாளருக்கு இடது புறம்) தெரிவது கொற்றவாளீசுவரர் கோயில். நாங்கள் போன நேரம் இடைவேளை நேரம்போல; கதவு திறந்திருக்கவில்லை.



4. கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில் ...





5. கோவிலைச் சார்ந்த பள்ளிக்கூடம் ...



6. களைத்தோர் களைப்பாறத் தங்கும் சிறு மண்டபங்கள் ...




வேறென்ன வேண்டும்?! ஆடம்பரமில்லாத அழகிய, அமைதியான இடம் இந்தக் கோவிலூர். பார்க்கவேண்டிய இடம்.

9 comments:

  1. காரைக்குடியில் பிறந்தவனா! இந்த படங்களின் மீது காதல். தாத்தாவோ அரியக்குடி தாசன். நானோ நாமமும், திருநீறும், ஒரு சேர அணிந்து வளைய வருபவன். போதாக்குறைக்கு, அக்காலத்தில் கோவிலூருக்கும் போய் விட்டு வந்தேனோ!. தாத்தா கொடுத்த டோஸ் இன்னும் நினைவில்.

    ReplyDelete
  2. காரைக்குடிக்கு அடிக்கடி நான் திரைத்துறை படப்பிடிப்பு தொடர்பாக செல்வதுண்டு

    நான் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே இருக்கும் கோயில்களுக்கு விடியற்காலையே எழுந்து குளித்துவிட்டு செல்வது வழக்கம். அப்படிக் கண்டது இந்தக் கோயில்கள். மிகவும் அருமையான அமைதியான கோயிலும் ,குளமும் கண்ணையும் மனதையும் கவர்வன

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  3. 'இ' சாரின் குறும்பு யாரையும் விட்டுவைக்கவில்லை! :-)

    தேனீயார், நீங்கள் கொடுத்துவைத்தவர்! கோயில் சார்ந்த குளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போதும் அங்கே போய் (எந்தக் கோவிலானாலும்) குளக்கரையில் உட்கார்ந்து அமைதியை உணர ஆவல். அந்தத் தேட்டம் ... எப்போது நிறைவேறுமோ!

    ReplyDelete
  4. அம்மா, எத்துனை அழகாக படம் பிடித்துள்ளீர்கள். ஆயிரம் கதைகள் பேசுகின்றன, படங்களே. நான் இன்னும் இந்த கோவிலுக்குச் சென்றதில்லை. விரைவில் செல்லும் ஆசையும் வந்துவிட்டது, நன்றி அம்மா.

    ReplyDelete
  5. மறுபடியும் படிக்க, இதமாக இருக்கிறது. கோவிலூரில் சின்ன வயதில் கிடைத்த இனம் தெரியாத ஆன்மீக சுகம், ஐம்பது வருடங்களுக்கு பிறகு சான் ஃப்ரான்ஸிச்கோவின் கத்தோலிக்க மாதாகோயிலில் கிடைத்தது. அப்போதும், இனம் புரியவில்லை.

    ReplyDelete
  6. அக்கா! செட்டிநாடு ‘செட்டிலாக’ நல்ல நாடு!

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    அடியேன் பிறந்த ஊர், இதே கோவிலூர் தான்.

    இதைப்பற்றி என் பதிவு ஒன்றிலும் வெளியிட்டுள்ளேன்.

    தலைப்பு: பெயர் காரணம்

    இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html

    ReplyDelete
  8. ஆனால் நான் பிறந்த இந்த கோவிலூரில் உள்ள மிகப்பெரிய சிவன் கோயிலில் உள்ள

    ஸ்வாமி பெயர் ஸ்ரீ ராஜகட்க பரமேஸ்வரர்.:

    அம்பாள் பெயர்: ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்பாள்

    என்பதாகும்.

    முதல் படத்தில் காட்டப்பட்டுள்ள கோயிலின் மிகப்பெரிய நுழைவாயிலும், இருபுறமும் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தூண்களும், கோயில் திருக்குளமும் மட்டும் நான் சமீபத்தில் சென்று வந்தபோது பார்த்ததை நினைவூட்டுவதாக உள்ளது.

    நன்றி.

    ReplyDelete
  9. நான் பிற்ந்த ஊரான கோவிலூர் காரைக்குடியிலிருந்து குன்னக்குடி போகும் பாதையில், காரைக்குடியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டரில் வலது பக்கமாக வரும் ஊர். மிகப்பெரிய நுழைவாயில் படம்-1 இல் காட்டப்பட்டுள்ளது, பஸ்ஸை விட்டு இறங்கியது ரோட்டின் மேலேயே இருக்கும்..

    தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete