Saturday, September 10, 2011

பருவம் என்னைத் தள்ளிவிட்டது ...

இதையே ... பண்டைத் தமிழில் "யாமும் உள்ளேம்" என்று சொல்லலாம்.

குருவி, புறா, பூனை, நாய், ... , செடி, கொடி, மரங்களைப்போல நம்முடன் உறவாடுவதில் ஈடு இணை வேறு எதுவும் இல்லை; அதெல்லாமே பேசாமல் பேசும்!


1. நான் பூத்துவிட்டேன் ...






2. இங்கெ பாருங்க ... எனக்கு எந்த வசதியும் இல்லெ -- தண்ணி குடுக்க ஒரு தளிர்கூட இல்லெ. ஆனாலும் ... பருவம் என்னைத் தள்ளிவிட்டது ... . இனி ... நான் ... எங்கேயோ? யார் கையிலோ?







3. நீ பார்க்காவிட்டால் என் இளமை காத்திருக்குமா? நான் காய்த்துவிட்டேன் ... . ( நிலத்திலிருந்து இரண்டு அடிக்கும் குறைவான கிளையில்! )





4. ஏனய்யா ஆப்பிலுக்கும் ஆரஞ்சுக்கும் என்று ஒப்புமை? எனக்கும் ஆப்பிலுக்கும் ஒப்புமை பாருங்க ... .





எல்லாமே என் வீட்டுத் தோட்டத்தில் நடந்த கதை!

இயற்கைக்கு என் நன்றி!

3 comments:

  1. இது கதையல்ல;நிஜம்.

    1. நான் இவளுடைய அக்காவை ஷாலிமார் தோட்டத்தில் கண்டேனே!

    2. பருவமானது கருவம் கொண்டதே. மற்ற உருவம் பொறுக்காதே. வேனிர் பருவம். முனைவர் ராஜம் நினைத்தால், சங்கப்பாடலை ஒத்ததொரு பாடல் நமக்கு கிடைக்கும்.

    3. இது இயர்கையின் தற்காப்பு. நடக்கட்டும்.

    4. இரண்டோ? மூன்றோ? கலாநிதி.க.கைலாசபதி அவர்களை கேட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete
  2. அழகான ஒப்புமை அம்மா. இப்போப் புதுசாக் குடி வந்திருக்கும் வீட்டில் சமையலறை ஜன்னலில் பிள்ளையார் சதுர்த்தி அன்று சாதம் வைக்க ஆரம்பித்ததிலிருந்து தவறாமல் இரண்டு குருவிகள் வருகின்றன. கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அங்கே அமர்ந்து மொலுமொலுவெனப் பேசும். நானும் கூடவே பேசுவேன். புரிந்தாற்போல் ஒரு ஜன்னல் பக்கமிருந்து இன்னொரு ஜன்னலுக்கு என் தலைக்கு மேலே பறந்து போகின்றன.

    ReplyDelete