Monday, October 24, 2011

தேன்குழல் ...

செய்தேனே ... !!

1. முதலில் ... பிள்ளையாருக்கு ... பிள்ளையார் மாவு ...



2. அச்சு வழியே பிழிபட்டு ... எண்ணெயில் மிதக்கும் குழல் ...



3. கர கர ... குழல்கள் ...




இங்கே முன்புறம் வெள்ளை வெளேர் என இருப்பதுதான் "அரை வேக்காட்டு"க் குழல்; மெது மெது என்று ... ஒரு "கிழவி"போல் தளர்ந்துபோய் ... மென்மையாக .... ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்!



வேறு வழியில்லாமல் ... சும்மா ... அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து செய்தேன்! நல்லாவே வந்தது! வல்லவ[னு/ளு]க்குப் புல்லும் ஆயுதம்???

ஒரு பெரீஇஇய இது .. என்ன-னா ... இதிலெ வெண்ணெய் கலக்கவே இல்லே. வீகன் (vegan) முறை!


5 comments:

  1. வினா: என்னப்பா! அரை வேக்காடா இருக்கையே!
    விடை: அரைவேக்காடு தேன்குழல் சுவை, அண்ணா! அம்மா தேன்குழல் பிழியும்போது தருவாளே, அது.

    ReplyDelete
  2. இங்கேயும் நேற்றுத் தேன்குழல்தான். ஆனால் பாருங்க அச்சின் துவாரம் ரொம்பவே மெலிதாக இருந்ததால் மாவு வெளியே வரவே இல்லை. மாவு கடையில் வாங்கலாம்னால் கிட்டத்தட்ட ஐந்து கிலோ பாக்கெட் தான் இருக்கு. அதனால் லாங் கிரெய்ன் அரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கினேன். உளுந்து வறுத்து அரைத்துச் சேர்த்தேன். தேன்குழல் அச்சில் பிழிய முடியவில்லை. முள்ளுத் தேன்குழலில் பிழிந்துவிட்டேன். நல்ல கரகரப்பாகவே இருக்கு. வெண்ணெய் கொஞ்சம் சேர்த்தேன்.

    ReplyDelete
  3. அபாரம். இங்கே சென்னையில் மழை, குளிர். அதற்கேற்றது சூடான முறுக்கு.

    ReplyDelete