காரட் -- வெள்ளைக்காரட்டும் ஆரஞ்சுநிறக்காரட்டும்
சாதாரணமாகக் கிடைக்கும் இளஞ்சிவப்பு ஆரஞ்சுநிறக் காரட் எல்லாருக்கும் தெரியும். இந்தப் பதிவில் 'வெள்ளைக் காரட்' என்று நான் குறிக்கும் ஒரு காயை அறிமுகப்படுத்துகிறேன்.
இது ஆங்கிலத்தில் 'பார்ஸ்னிப் (parsnip)' என்று குறிக்கப்படும்.
இதன் படம்:
ஓ, அதென்ன பொத்தகம்? அதுவா. அது நான் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கிழித்துக்கொண்டிருக்கும் சங்க இலக்கியப் பொத்தகங்கள்; வையாபுரிப்பிள்ளையவர்களின் அருமையான பதிப்பு. என் துயர்தீர்க்கும் மருந்து. என் மேசையில் எப்பவும் இருக்கும்.
சரி, இந்த வெள்ளைக் காரட்டையும் நமக்குப் பழக்கமான மற்ற காரட்டையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். பல வகைகள் உண்டு. ஆனால் இங்கே ஒரு வகைச் செய்முறை.
கீழே காண்பது-போல் பார்செனிப்பைச் சீவிக்கொள்ளவும். தனிக்கோல் போல உள்ளது சீவ முடியாமல் நான் விட்டது. தனியே கடித்துச் சுவைக்கலாம்.
நமக்குத் தெரிந்த சாதாரணக் காரட்டையும் சீவிக்கொள்ளவும்.
மேற்சொன்ன இரண்டு சீவல்களையும் கலந்து, தேவையான அளவுக்கு எலுமிச்சைச் சாறும் உப்பும் கலந்து ... கொத்தமல்லித்தழையை மேற்போக்காகத் தூவவும்.
[என்னிடம் இருந்தது இத்தாலியக் கொத்துமல்லித்தழை -- பார்செலி!]
இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்துக்குக் கண்ணுக்கு உவந்த சத்துள்ள சுவையான எளிதில் உருவாக்கக் கூடிய உணவு.
[அபாய அறிவிப்பு: ஏற்கனவே இனிமை மிகுந்தவர்கள் மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளவும். சாதாரணக் காரட்டை விட, பார்செனிப்பில் இனிப்பு மிகுதி.]
No comments:
Post a Comment