இது ஒரு நல்ல கூட்டு அல்லது கூழ் போல ...
1. பார்லியை நன்கு கழுவி, நல்ல தண்ணீரில் சுமார் 2~4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பார்லியின் தரத்திற்கு ஏற்றபடி ... சுவை இருக்கும்.
2. ஊறவைத்த பார்லியை ஒன்றுக்கு 4~6 பங்குத் தண்ணீரில் வேகவைக்கவும்.
3. கடி பதமோ, மெல் பதமோ, குழை பதமோ -- அவரவர் விரும்பிய பதத்திற்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
4. வெந்த பார்லியை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். (வடிந்த பார்லி நீரைத் தனியாக எடுத்து வைக்கவும். பின்னால் வேறு ஒரு சமையலுக்கு உதவும்.)
5. சௌ சௌ கூட்டுக்கு மசாலா தயாரிக்கவும். கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம், தேங்காய் -- இவை கலந்தது.
6. வெந்த காய்கள் (சௌ சௌ), மசாலா, வெந்த பார்லி ... இவைகளைக் கலந்து சிறிது நேரம் (10~15 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.
7. மேற்கண்ட கலவை நல்ல முறையில் கொதித்த பின், அடுப்பிலிருந்து இறக்கவும்.
8. கடுகு, பச்சைக் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (தேவையானால்) இவற்றைத் தாளிக்கவும்.
9. கூடச் சேர்த்துச் சாப்பிட ... ஒரு நல்ல காய்க் கலவை செய்துகொள்ளவும்.
உடலுக்கும் கண்ணுக்கும் நல்லவை! அன்போடு விரும்பிச் சுவைக்கவும்!
Saturday, January 1, 2011
Friday, December 31, 2010
நன்றியும் ... நம்பிக்கையும்...
1. நன்றி சொல்வேன் இந்த நல்ல பழங்களுக்கு ...
2. நன்றி சொல்வேன் இந்தத் திறனாளிக்கு (surviver) ...
3. நன்றி சொல்வேன் இந்த நம்பிக்கையாளருக்கு ...
2010-இல் இயற்கை தந்ததுக்கும் ... இனி 2011-இல் இனிமையாய்த் தருவதற்கும் ... என் நன்றி!
2. நன்றி சொல்வேன் இந்தத் திறனாளிக்கு (surviver) ...
3. நன்றி சொல்வேன் இந்த நம்பிக்கையாளருக்கு ...
2010-இல் இயற்கை தந்ததுக்கும் ... இனி 2011-இல் இனிமையாய்த் தருவதற்கும் ... என் நன்றி!
Wednesday, December 29, 2010
ஓட்சுக் கலவை...
மறுபடியும் ஓட்சா? ஆமாம்! இது ஒரு வித்தியாசமான கலவை.
முதலில் சில உணவுப் பொருள்களைத் தனித்தனியாகத் தயார் செய்து கொள்ளவேண்டும். அதன் பிறகு எல்லாவற்றையும் நல்ல அளவில் எடுத்துக்கொண்டு கலக்கலாம்.
1. பெரிய கொண்டைக் கடலையை (garbanza beans / chick peas) ஊறவைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. பறங்கிக்காய்த் துண்டுகளை விரும்பிய அளவில் நறுக்கிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
3. பறங்கிக் காயை வேகவைத்து, விரும்பிய மசாலாத் தூள் சேர்த்துச் சமைத்து எடுத்துக் கொள்ளவும்.
4. தனியே ஒரு நல்ல பாத்திரத்தில் ... பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, பச்சைக் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம் இவற்றைத் தாளித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
5. மேற்கண்ட கலவையில் தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும்.
6. ஓட்சு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
7. பச்சடி ஏதாவது தயார் செய்துகொள்ளவும். இங்கே உள்ளது "பீட் ரூட்" பச்சடி.
8. வேகவைத்த ஓட்சு, கொண்டைக்கடலை, பறங்கிக்காய், மசாலாக் கலவை -- இவற்றை அவரவர் தேவைக்கும் சுவைக்கும் ஏற்றபடிக் கலந்துகொள்ளவும். சிறிது உப்பு (தேவையான அளவு) சேர்க்கவும்.
கண்ணுக்கும் சுவைக்கும் வயிற்றுக்கும் நல்ல உணவு!

Friday, December 24, 2010
அன்றும், இன்றும், என்றும் ...
யார் இவன்? திடீரென ... பச்சோந்தி ...
1. நெருப்பென ...
2. நீல மேகன்....
3. சியாமளன் ...
4. பச்சை மேனியன் ...
5. பவள வாயன் ...
5. a. பொன்னார் மேனியன் ...
6. என்றும் ... மாறாத .... "கல்லுக் குந்தாணி" என் தோட்டக் காவல்காரர் ... Santa-வின் elf Noam
இயற்கைக்கு நன்றி!

Thursday, December 23, 2010
தோட்டுப்பூ...
தோடு போன்ற இந்தப் பூவிற்கு ஆங்கிலத்தில் பெயர் gardenia. அதனால் தோட்டப்பூ என்றுகூடச் சொல்லலாம்.
1. இந்தப் பக்கம் பார்...
1. இந்தப் பக்கம் பார்...
2. கொஞ்சம் இப்படித் திரும்பு...
3. மறைந்து விளையாடுகிறாயே...
நீ வாடினாலும் அழகு! ஒளிந்தாலும் ... உன் கொள்ளை நறுமணம் ஊரைக் கூட்டுமே!
Wednesday, December 22, 2010
Tuesday, December 21, 2010
எட்டாததும் ... எட்டியதும்...
1. முழு மறைப்புக்கு (eclipse) முன் ...
2. அதே இரவில் ... ரசக் கொதிப்பு...
பின்னதாவது கைக்கும் வாய்க்கும் எட்டியதே! இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் நன்றி!
2. அதே இரவில் ... ரசக் கொதிப்பு...
பின்னதாவது கைக்கும் வாய்க்கும் எட்டியதே! இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் நன்றி!
Subscribe to:
Posts (Atom)