Saturday, January 1, 2011

பார்லி (barley) + சௌ சௌ ...

இது ஒரு நல்ல கூட்டு அல்லது கூழ் போல ...

1. பார்லியை நன்கு கழுவி, நல்ல தண்ணீரில் சுமார் 2~4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.


பார்லியின் தரத்திற்கு ஏற்றபடி ... சுவை இருக்கும்.

2. ஊறவைத்த பார்லியை ஒன்றுக்கு 4~6 பங்குத் தண்ணீரில் வேகவைக்கவும்.

3. கடி பதமோ, மெல் பதமோ, குழை பதமோ -- அவரவர் விரும்பிய பதத்திற்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

4. வெந்த பார்லியை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். (வடிந்த பார்லி நீரைத் தனியாக எடுத்து வைக்கவும். பின்னால் வேறு ஒரு சமையலுக்கு உதவும்.)


5. சௌ சௌ கூட்டுக்கு மசாலா தயாரிக்கவும். கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம், தேங்காய் -- இவை கலந்தது.



6. வெந்த காய்கள் (சௌ சௌ), மசாலா, வெந்த பார்லி ... இவைகளைக் கலந்து சிறிது நேரம் (10~15 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

7. மேற்கண்ட கலவை நல்ல முறையில் கொதித்த பின், அடுப்பிலிருந்து இறக்கவும்.

8. கடுகு, பச்சைக் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (தேவையானால்) இவற்றைத் தாளிக்கவும்.



9. கூடச் சேர்த்துச் சாப்பிட ... ஒரு நல்ல காய்க் கலவை செய்துகொள்ளவும்.



உடலுக்கும் கண்ணுக்கும் நல்லவை! அன்போடு விரும்பிச் சுவைக்கவும்!

2 comments:

  1. "...கடி பதமோ, மெல் பதமோ, குழை பதமோ -- அவரவர் விரும்பிய பதத்திற்கு ..."

    - இது வாழ்க்கையை செவ்வனே அமைத்துக்கொள்வதற்கும் உன்னதமான நெறி.

    ReplyDelete
  2. உங்கள் செய்முறையும், அதற்கான இன்னம்பூராரின் விமரிசனமும் அசத்துகிறது. பார்லியைச் சாதம் போல் வேகவைத்துக் காய்கள் சேர்த்துச் சாப்பிடுவோம். இது புதுமுறை. நன்றி அம்மா.

    ReplyDelete