Monday, November 8, 2010

ஓட்சும் மிளகு-புளிக்குழம்பும்...

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

1. ஒரு சிறு கோப்பை அளவு ஐரிஷ் ஓட்ஸ் (Irish steel cut oats) எடுத்துக் கழுவி வேகவைக்கவும்.



2. ஓட்ஸ் வேகும்போது... கறி மசாலா தயாரிக்கவும்.



3. ஓட்ஸ் வெந்ததும், கறி மசாலா தயாரானதும், இரண்டையும் கலந்து 10~15 மணித்துளிகள் சமைக்கவும்.

4. கடுகும் கறிவேப்பிலையும் தாளிக்கவும்.





****************************************************************

1. சிறு எலுமிச்சை அளவு புளியின் சாறு எடுத்துக்கொள்ளவும்.

2. வெண்டைக்காய்த் துண்டுகளைப் புளிச்சாற்றில் கலந்து கொதிக்கவிடவும்.




3. மசாலா: மிளகு, சீரகம், மிளகாய் வத்தல் இவற்றைச் சுத்தம் செய்து எண்ணெயில்லாமல் வறுத்துப் பொடிக்கவும்.



4. புளி, வெண்டை கலவை பாதி கொதிக்கும்போது (~15 மணித்துளிகளுக்குப் பின்?) மிளகு பொடியைக் கலக்கி வேகவிடவும்.

5. மேற்படிக் கலவை நன்கு கொதித்தபின் கடுகு தாளிக்கவும். பச்சைக் கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.




மகிழ்ச்சியோடு மனநிறைவாக உணவைச் சுவைக்கவும்!

4 comments:

  1. ஆகா அருமையம்மா, இன்று செய்முறையும் விளக்கிவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. எப்படி இப்படி செய்து இன்று என் காலை உனவு உண்டேன் என்று உங்களுக்கு தெரிந்தது, ராஜம்?

    ReplyDelete
  3. ப்யூர் மாஜிக் ... 'இ' சார்! :-)

    பெண்ணுக்கும் சொல்லுங்கள் பவளஸ்ரீ. இளைய தலைமுறை நல்லது சமைத்துப் பயன்பெறட்டும்.

    ReplyDelete
  4. செய்முறை எல்லாமே மிகவும் எளிதானவை. ஒரு தரம் முயன்று பார்த்துட்டுச் சொல்றேன்.

    ReplyDelete