Friday, November 12, 2010

வித்தியாசமான மோர்ச் சாறும் கிழங்கும்...

சோய் மோர்ச்சாறு:
----------------------


சோய்ப் பாலில் ஒரு சிறு எலுமிச்சையின் சாற்றைக் கலந்து பாலை உறைய வைப்பதுபோல் உறையவைக்கவும். சூழ்நிலையின் வெப்பத்திற்கேற்றபடிச் சோய்ப்பால் உறைந்து தயிராகும். (குளிர்நாடுகளில் இந்தத் தயிர் புளிக்க இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். புளிக்காமலேகூடப் போகலாம்!)

சோய்த்தயிரை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடியும் நீரை நல்ல பாத்திரத்தில் ஏந்திக் கொள்ளவும்.

1. சோய்த் தயிரை வடிகட்டுதல்.



2. மேலே வடிகட்டிக்குக் கீழே சேர்ந்த மோர். (வடிகட்டியில் சேர்ந்த சோய்த் திரளைப் பாலடைக்கட்டி [cheese] போலப் பயன்படுத்தலாம்.)



3. ஒரு நல்ல பாத்திரத்தில் கடுகு, சிறிது வெந்தயம், 3~4 மிளகாய் வத்தல் இவற்றைத் தாளித்து, சிறிது (1/2 தேக்கரண்டியளவு) மஞ்சள் பொடி ("மஞ்சள் தூள்") கலக்கவும்.

4. சோய் மோரை மேற்கண்ட தாளிப்புக் கலவையுடன் சேர்த்து இளஞ்சூட்டில் கொதிக்கவைக்கவும். சூடு கூடினால் மோர் திரிந்துபோகும். அவ்வாறு திரிந்துபோகாமல் கரண்டியால் அடிக்கடிக் கலக்கிவிடவும்.

5. 10~15 மணித்துளி கொதித்தபின் கொதிவந்த மோரை அடுப்பிலிருந்து இறக்கி, பச்சைக் கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். சிறிதளவு உப்புச் சேர்த்துக்கொள்ளலாம்.



சுவையான சோய் மோர்ச் சாறு தயார்.

++++++++++++++++++++++++++++++++++

1. "போலிச் சிறுகிழங்கு" (நான் வைத்த பெயர்). ஜெரூசலம் ஆர்ட்டிச்சோக் (Jerusalem artichoke) அல்லது சன் ச்சோக் (sunchoke) என்று சொல்கிறார்கள்.



2. நன்றாகக் கழுவி, தோல் சீவி, வில்லைகளாக (அல்லது சிறு துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும்.




3. பச்சையாகச் செய்யும் salad-இல் கலக்கலாம்.





4. மற்றக் கிழங்குகளைச் சமைப்பதுபோல் சமைக்கவும் செய்யலாம்.







எப்படிச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் சுவைத்து உண்ணவும்.

2 comments:

  1. நல்ல வித்யாசமான சோயா தயிர் மோர் குழம்பு......நன்றியம்மா.

    ReplyDelete
  2. உடல்நிலை சரியில்லாதவர்களுக்குச் சிறிது ஓமம் சேர்க்கலாம். அரிசி மாவை மோரோடு சேர்த்துக்கொண்டால் திரிவதில் இருந்தோ அல்லது நீர்த்துப் போவதில் இருந்தோ தடுக்கலாம். இந்தப் பின்னூட்டம் முன்னாடியே கொடுத்தது, என்னுடைய கணினியின் ரீ ஸ்டார்ட் பிரச்னையில் பதிவாகவில்லை என்பதை இப்போது தான் கவனித்தேன். :)))))))))))

    ReplyDelete