Wednesday, December 29, 2010

ஓட்சுக் கலவை...

மறுபடியும் ஓட்சா? ஆமாம்! இது ஒரு வித்தியாசமான கலவை.

முதலில் சில உணவுப் பொருள்களைத் தனித்தனியாகத் தயார் செய்து கொள்ளவேண்டும். அதன் பிறகு எல்லாவற்றையும் நல்ல அளவில் எடுத்துக்கொண்டு கலக்கலாம்.

1. பெரிய கொண்டைக் கடலையை (garbanza beans / chick peas) ஊறவைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.



2. பறங்கிக்காய்த் துண்டுகளை விரும்பிய அளவில் நறுக்கிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.



3. பறங்கிக் காயை வேகவைத்து, விரும்பிய மசாலாத் தூள் சேர்த்துச் சமைத்து எடுத்துக் கொள்ளவும்.



4. தனியே ஒரு நல்ல பாத்திரத்தில் ... பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, பச்சைக் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம் இவற்றைத் தாளித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.



5. மேற்கண்ட கலவையில் தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும்.

6. ஓட்சு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.



7. பச்சடி ஏதாவது தயார் செய்துகொள்ளவும். இங்கே உள்ளது "பீட் ரூட்" பச்சடி.






8. வேகவைத்த ஓட்சு, கொண்டைக்கடலை, பறங்கிக்காய், மசாலாக் கலவை -- இவற்றை அவரவர் தேவைக்கும் சுவைக்கும் ஏற்றபடிக் கலந்துகொள்ளவும். சிறிது உப்பு (தேவையான அளவு) சேர்க்கவும்.



கண்ணுக்கும் சுவைக்கும் வயிற்றுக்கும் நல்ல உணவு!

3 comments:

  1. என்னுடைய பிரச்னையே ஓட்ஸை வேக வைப்பதில்! அது வேகாவிட்டால், வயிறு படுத்து. வெந்துவிட்டதா இல்லையா என்பதை, மைக்ரோ ஓவனில் செய்யும் போது உறுதி படுத்தவேண்டும் என்பதர்கு வழி என்ன? வாழ்க்கையில் என்னை படுத்திய மர்மங்களில் இது ஒன்று.

    ReplyDelete
  2. புதுசு. ஓட்ஸ் எரிவாயு அடுப்பில் வைத்தாலே நல்லா வேகிறதே! ரொம்ப வெந்துட்டால் வழவழனு ஆயிடும். மைக்ரோவேவில் இரண்டு நிமிஷம் வைச்சால் போதும்னு நினைக்கிறேன். முன்னாலே அதிலே தான் வைச்சேன். இப்போ அடுப்பிலேயே வைக்கிறேன். நல்லா வேகிறது.

    ReplyDelete
  3. சமையல் குறிப்பு முற்றிலும் புதியது. முயன்று பார்க்கணும்! வரவேற்பு எப்படியோ! :))))))

    ReplyDelete