Saturday, September 24, 2011

அது அந்தக் காலம் - 2

1. ஆன் ஆர்பரில் (Ann Arbor, Michigan; 1981?) ... தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு  ஆர்வலரின் சிறு கூட்டம்; முதல் முயற்சி. நான் குடியிருந்த சிறு வீட்டில் ... 2~3 நாட்கள். நேரம் போவது தெரியாமல் ... களைப்படையாமல் ... பேசி, விவாதித்து, மொழிபெயர்த்து ... மிக அருமையான நிகழ்வு! 

இடமிருந்து வலமாக: டேவிட் பக், பௌலா ரிச்மன், நான், நார்மன் கட்லர்.

அந்தக் கூட்டத்தின்போதுதான் இறையனார் களவியல் பற்றிச் சொன்னேன்; மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று. டேவிட் பக் பின்னாளில் அதைச் செய்துமுடித்தார். பௌலா ரிச்மன் முனைவர் பட்டத்திற்கு மணிமேகலை ஆய்வு. பின்னாளில் ... பிள்ளைத்தமிழ். பிறகு பலவகை இராமாயணம். நார்மன் கட்லர் ஏ. கே. ராமானுஜன் அவர்களின் அருமை மாணவர். திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இளவயதில் இறந்துவிட்டார். தமிழுக்கு மேலும் ஓர் இழப்பு.

2. பிலடெல்பியா (1982-க்குப் பிறகு). ஆசிய இலக்கிய மாநாட்டில் தமிழ்ப் பிரபந்தங்கள் பற்றிய கருத்தரங்கு.

இடமிருந்து வலம்: நான் (கருத்தரங்குத் தலைமை; பேசியது உலா இலக்கியங்கள் பற்றி), நார்மன் கட்லர் (பேசியது  திருக்கோவையார் பற்றி), பௌலா ரிச்மன் (பேசியது பிள்ளைத்தமிழ் பற்றி), டேவிட் ஷுல்மன் (பேசியது பரணி பற்றி). அருமையான கருத்தரங்கு!


3. வாஷிங்டனில்.


டேவிட் ஷூல்மன் அருகில் இருக்கும் பையில் ... சுந்தரர் தேவாரம் -- அவருடைய மொழிபெயர்ப்பு ... உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில். நூல் வெளியிடப்பட்டது 1990-இல். டேவிட் போல் முனைந்து தேவாரத்தைப் படித்தவரைக் கண்டதில்லை.

6 comments:

  1. நிச்சியமாக, இவை ஆவணங்கள் தான். இவற்றை தமிழ் மரபு விக்கியிலும் சேகரித்து வைப்பது நலமே. நேரம் கிடைத்த போது, பொழிப்புரை, விரிவுரை எல்லாம் வேண்டும்.

    ReplyDelete
  2. அம்மா, அதோடு அந்தச் சம்பவங்களின் தொகுப்பும், திருக்கோவையார், பிள்ளைத் தமிழ் ஆகியவை குறித்து நீங்கள் பேசியவைகளும், அல்லது எழுதிய கட்டுரைகளும் போட்டால் இன்னும் சிறப்பு.

    ReplyDelete
  3. என் ஆசை, ‘இறையானர் களவியல்’ பற்றிச் சொல்ல வேண்டும் என்பது.

    இந்த டேவிட் பக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்திருக்கிறாரா?

    ReplyDelete
  4. அரிய புகைப்படங்கள். இந்த குறிப்புகளை சற்று விரிவுபடுத்தி எழுதி விக்கியில் வெலியிடலாம்.

    ReplyDelete
  5. அம்மாடியோவ்!
    1981-இல் தமிழ் கருத்தரங்கக் கூட்டமா? அதிலும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பிள்ளைத்தமிழ், தேவாரம் பற்றியெல்லாம் ஆராய்ச்சி நூல்கள் வெளியுட்டுள்ள நிலையில், நான் இவையெல்லாம் படிக்காத நிலையில் வெட்கித் தலை குனிகிறேன்.

    பாபு கோதண்டராமன்

    ReplyDelete
  6. அருமையான வரலாற்றுப்படங்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. அருள்கூர்ந்து உங்கள் நினைவில் உள்ள கருத்துகளைப் பகிருங்கள். முடியுமென்றால் உ.வெ.சா அவர்கள் எழுதியதுபோல தன்வரலாறு ஒன்றை நீங்கள் தமிழில் எழுதவேண்டும் . சுருக்கமாகவாவது, ஒரு 40-60 பக்கங்களாவது உங்கள் இனிய தமிழில் எழுத வேண்டுகின்றேன். விரிவாக 300-400 பக்கங்களுடன் எழுதினால் அரிய இலக்கியமாகவிருக்கும்.

    ReplyDelete