Tuesday, November 16, 2010

புளிக்குழம்பு... + ... பருப்பு உசிலி

மறுபடியுமா? ஆம். இவை வேறுபட்ட மசாலாவுடன் + வேறுபட்ட பருப்பிலிருந்து.

புளிக்குழம்பு
----------------
1. ஒரு தக்காளி (அளவு நாட்டுக்கு நாடு வேறுபடும்), 1-3 பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கு ஏற்றபடி), 1/2 தேக்கரண்டி சோம்பு (fennel seeds), சிறிதளவு வெங்காயம் (அவரவர் சுவைக்கு ஏற்றபடி) -- இவற்றை எடுத்துக்கொள்ளவும்.

2. தக்காளியையும் மிளகாயையும் கழுவி நீள வாக்கில் வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.

3. வெங்காயத்தையும் நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். (சிறிய, நாட்டு வெங்காயம் இருந்தால் நல்ல சுவை கூடும்!)

4. ஒரு நல்ல பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடு வந்தவுடன் முதலில் சோம்பைப் போட்டு அது நிறம் மாறத் தொடங்கும்வரை வதக்கவும்.

5. மேற்கண்ட கலவையில் மிளகாய்க் கீற்று, வெங்காயம் இவற்றைப் போட்டு வதக்கவும். (3~5 மணித்துளிகள் வதக்கினால் போதும். அவரவர் அடுப்புக்கு ஏற்ற சூட்டினால் இந்தக் கணக்கு மாறலாம்.)

6. மேற்கண்ட கலவையில் தக்காளிக் கீற்றுக்களைப் போட்டு வதக்கவும். (5~10 மணித்துளிகள் போதும்.)

7. வெந்து வதங்கிய கலவையைத் தனியே எடுத்துவைக்கவும்.


8. ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி எடுத்துத் தூய்மை செய்து சாறு எடுத்துக்கொள்ளவும்.

9. கழுவித் தூய்மை செய்த வெண்டைக்காய் அல்லது உருளைக்கிழங்குக் கீற்றுகள் எடுத்துக்கொள்ளவும். இந்தக் காயைச் சிறிது எண்ணெயில் 3~5 மணித்துளிகள் வதக்கவும்.

10. வதங்கிய காயில் சிறிது சாம்பார்ப்பொடி (1~2 தேக்கரண்டி) கலந்து இன்னும் ஒரு மணித்துளி வதக்கவும். (சாம்பார்ப் பொடி இல்லையென்றால் ... சிறிது சீரகப்பொடியும், கொத்துமல்லிப்பொடியும், மிளகு பொடியும் சேர்த்தாலும் அது ஒருவகை மணமும் சுவையும் தரும்.)

11. வதங்கிய காயில் புளிச்சாற்றைக் கலந்து சிறிது நேரம் (~5 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

12. தக்காளிக் கலவையைப் புளிக்கலவையில் சேர்த்துச் சிறிது நேரம் (~10 மணித்துளிகள்) கொதிக்கவிடவும்.

13. மேற்கண்ட குழம்பு கொதிவந்தபின் அடுப்பிலிருந்து எடுத்துவைக்கவும்.

14. பச்சைக்கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.  தேவையானால் சிறிதளவு உப்பும் சேர்க்கலாம்!


இந்தக் குழம்பு நாட்பட நாட்பட நல்ல நறுமணமும் சுவையும் மிகுந்து தெரியும். ஆனால், கெட்டுப்போகாதபடி வைத்திருக்கவேண்டும்!

+++++++++++++++++++++++++++

வித்தியாசமான பருப்பு உசிலி. பீன்ஸ் (beans) வகைகளிலிருந்து.




குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தவும். எப்படிச் சமைத்தாலும் மகிழ்ச்சியாக, அளவோடு சுவைத்து உண்ணவும்!

4 comments:

  1. இதோ! கறிகாய் நறுக்கப்போகவேண்டும். வத்த்க்குழம்பு ரொம்ப பிடிக்கும். வஸந்தா இருந்தால், எல்லாவற்றையும் செய்து விடுவாள். She asked for recipes from the catering department, while in intensive care in Apollo Hospitals and tried them on return. Innovation is key.

    ReplyDelete
  2. அம்மா....ரெசிபி மெருகேறிக்கிட்டே போய் சூப்பரா போட்டுட்டீங்க. இவ்வளவு பிசியான ஆய்வுப் பணியில் இதுவும்.....நன்றிம்மா.

    ReplyDelete
  3. இன்னாம்பூராரின் கண்ணீர்க்கதையோடு புளிக்குழம்பின் மணமும் ஊரைத் தூக்கறது. நன்றி. நானும் செய்வேன், தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், முருங்கைக்காய் போட்டு. வெண்பொங்கலுக்கு நல்லா மாட்ச் ஆகும். அதாவது எங்க வீட்டிலே எல்லாருக்கும் பிடிக்கும். அடுத்து அடைக்கு! :))))))))

    ReplyDelete
  4. ஆமாம், இ சாரின் அன்பான அழகான குறிப்பு ... என்ன வகை ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை. முடியாது என்று மட்டும் தெரியும். இங்கேயும் கசிவு... நெஞ்சிலும் கண்ணிலும்.

    ReplyDelete